search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டியில் 2 மணி நேரம் கொட்டிய மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    ஊட்டி காந்தல் பகுதியில் மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    ஊட்டியில் 2 மணி நேரம் கொட்டிய மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    • ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மழை தற்போதும் பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    குறிப்பாக, ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதம் பெய்த மழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல், நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    குறிப்பாக, ஊட்டியில் நேற்று 2 மணிக்கு பெய்த மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், கூட்செட் போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    ஊட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக காந்தல் கே. கே. நகர் தெருக்கள் மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் புகுந்த மழை நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றினர்.


    Next Story
    ×