search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "processing plant"

    • கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளியை தரம் உயா்த்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினாா்.

    ஊட்டி

    ஊட்டி அருகே உள்ள பாகல்கோடுமந்து பழங்குடியின கிராமத்தில் கட்டப்படும் பழங்குடியினருக்கான பால் பதனிடும் நிலையத்தை தமிழக பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    முன்னதாக தேவாலா அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியை ஆய்வு செய்து, அங்குள்ள பெற்றோா்ஆ சிரியா் கழக உறுப்பினா்களை சந்தித்து அப்பள்ளியை மேலும் தரம் உயா்த்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினாா்.

    இதனையடுத்து பந்தலூா் வட்டத்தில் புதிய வீடுகள் கோரிய பழங்குடியின கிராமங்களான 10-ம் நம்பா் காலனி, ஏலமன்னா ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

    பின்னா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமை வழங்குவது, அவா்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினாா்.

    இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட பழங்குடியின வீடுகளுக்கு வழங்கப்பட்ட தொகையைவிட தற்போது வழங்கப்படும் வீடுகளுக்கு கூடுதலாக தொகை வழங்கப்படும் எனவும், அத்துடன் பணி முடிக்காமல் நிலுவையில் உள்ள வீடுகளுக்குத் தேவையான முன்மொழிவுகள் அனுப்பும் பட்சத்தில் கூடுதலாக தொகைப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தாா்.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அருண்குமாா், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    ×