என் மலர்
நீலகிரி
- அனைத்து திட்டங்களையும் மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
- மாணவிகள் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் "புதுமைப்பெண்" இரண்டாம் கட்ட திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் புதுமைப் பெண் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு திட்ட கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமை யிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின்கீழ் 6 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே 5. 9.2022 அன்று புதுமைப்பெண் திட்டம் முதற்கட்டமாக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 கல்லூரிகளில் பயிலும் 383 மாணவிகளுக்கு கடந்த 5 மாதங்களில் சுமார் ரூ.19.15 லட்சம் வங்கி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்ட மானது பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவி களுக்கு உயர்கல்வி கற்பதற்கு உதவியாகவும், மாதந்தோறும் அவரவர் வங்கி கணக்கில் தலா ரூ.1,000 உதவித்தொகை பற்று வைப்பதால் தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும்.
இன்று 2-வது கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்பகல்லூரி, தொழிற்கல்வி பழகுநர் பயிலகம் (ஐடிஐ) என அனைத்து வகையான உயர்கல்விப்படிப்பினை உள்ளடக்கிய 11 கல்லூரி களில் உயர்கல்வி பயிலும் 165 மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்பட்டு பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாடு அரசு செயல்டுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு மாணவிகள் பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்ட ருடன் "நான் புதுமைப் பெண்ணை ஆதரிக்கிறேன்" என்ற வாசகங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மாணவிகள் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- கரிமொரா கிராமத்தில் நடைபெற்றது.
- பண்பாடு குறித்து புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
ஊட்டி,
நீலகிரியில் படுக இன மக்களின் மொழி, பண்பாடு, இயற்கையுடன் இணைந்து வாழும் கலாசாரம் அடங்கிய வாரத்தில் 8 நாட்கள், பூஜ்யத்தின் மதிப்பு என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா குன்னூரை அடுத்த கரிமொரா கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாக்கு பெட்ட படுக சமுதாய தலைவா் முருகன் நூல்களை வெளியிட கரிமொரா ஊா் தலைவா் நட்ராஜ் பெற்றுக் கொண்டாா். விழாவில் சிறப்பு விருந்தினராக படுக தேச பாா்ட்டி நிறுவனத் தலைவரும், பாலகொலா ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான மஞ்சை மோகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- படுக மொழிக்கு என்று தனிப்பட்ட எழுத்து இல்லாத நிலையில், படுக மொழிக்கான எழுத்தை வடிவமைக்க விடா முயற்சியை தொடா்ந்து கொண்டிருக்கும் சரவண குமாா் இந்த புத்தகத்தை தமிழ் மொழி கலந்து படுக எழுத்துகளாக உருவாக்கி, படுக இன மக்களின் கலாசாரம், பண்பாடு குறித்து புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
விரைவில் படுக சமுதாய மக்கள் தமிழக முதல்வரை சந்தித்து படுக மொழிக்கான அங்கீகாரத்தை வழங்கிட வலியுறுத்த உள்ளோம் என்றாா். நிகழ்ச்சியில் குந்தே சீமே பாா்பத்தி அன்னமலை முருகேசன், ஜக்கதா ஆறு ஊா் தலைவா் முருகன், குந்தே சீமே சின்னகனி போஜாகவுடா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
- வாகன போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கீழ்குந்தா, கரியமலை மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. சமீபகாலமாக அப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகமாக நடமாடி வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சூர் டவுன் பகுதியில் குடியிருப்புகளுக்குள் காட்டெருமை ஒன்று புகுந்து நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
- குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பஸ் எதிர்பாராதவிதமாக மீது மோதியது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்லண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கனி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மனைவி நஸ்ரின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் அப்துல் கனி வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் மதியம் குன்னூர்-ஓட்டுப்பட்டறை சாலையில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்வதற்காக தாலுகா அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குன்னூரில் இருந்து பழைய அருவங்காடு செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அப்துல் கனி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அப்துல் கனி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் நகர போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குன்னூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
- பண்ணை நவீனம யமாக்கப்படவுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ள மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் பண்ணையை மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டாா்.
மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு மூலம் ரூ.2.50 கோடி மதிப்பில் அவலாஞ்சியில் உள்ள டிரவுடன் மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் பண்ணை நவீனம யமாக்கப்படவுள்ளது. இதையடுத்து, மீன் குஞ்சுப் பண்ணையை ஆய்வு செய்த கலெக்டர் அம்ரித், தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கேற்ப தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதனையடுத்து கலெக்டர் அம்ரித் பேசியதாவது:- நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் டிரவுட் மீன் குஞ்சுகளை இருப்புவைத்து வளா்த்தெடுக்க கடந்த 1863 ஆம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன் வள ஆராய்ச்சியாளா் பணிகளை தொடங்கினாா். பின்னா் ஹென்றி சாா்ல்டன் வில்சன் என்ற ஆங்கிலேய மீன்வள ஆராய்ச்சியாளரால் டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் வளா்ப்புப் பண்ணை 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பண்ணையானது கடல் மட்டத்தில் இருந்து 2,036 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பண்ணையில் டிரவுட் மீன்களிலிருந்து முட்டைகளை எடுத்தல், முட்டைகளிலிருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், மீன் குஞ்சுகளை வளா்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுக்கு தோராயமாக 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டிரவுட் மீன்குஞ்சுகள் வளா்க்கப்படுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் சேதமடைந்தது. இதனை தேசிய வேளாண் அபிவிருத்தி - திட்டத்தின் கீழ் நீா்வழிப் பாதை சீரமைப்புப் பணிக்காக ரூ.10 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா் 2023 ஜனவரியில் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் உள்ள அரசு டிரவுட் மீன் பண்ணையிலிருந்து 20 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன் குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மீன்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், பவானிசாகா் உதவி இயக்குநா் கதிரேசன், குந்தா வட்டாட்சியா் இந்திரா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
- வசதிகள் ஏற்படுத்திதர வலியுறுத்தல்.
- ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோத்தகிரியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்த கிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய தாலுக்காவில் உள்ள அனைத்து தனி யார் ஆம்புலன்ஸ் உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தீபக், மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் அக்கீம், துணைத் தலைவர் இஸ்மாயில், செயலாளர் இஷாத், பொருளாளர் சலமான், கௌரவ தலைவர் மற்றும் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டு மாநில தலைவரிடம் கூறி அவர்களது குறை கள் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில்
2 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஓட்டுனர்களுக்கு நோயாளிகளை எப்படி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பது என்று விளக்கி கூறினார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் ஓன் போர்டு வாகனங்கள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பிரேதத்தை எடுத்துச் சென்றால் ஆர்டிஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களில் வனவிலங்கு தொந்தரவு மற்றும் முறையாக சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் எந்த ஒரு அவசர தேவைக்கும் தங்களின் உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தமிழக அரசு சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது ெதரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த ராஜ்குமார் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாரதி நகர் சேர்ந்த மோகன் தாஸ் (வயது31) என்பவரை லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
- சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
- யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலை அடா்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காரமடை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளை தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.
சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதேபோல அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்களும் இவ்வாறு புகைப்படம் எடுத்தனர்.
இதனால் யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன. யானைகள் ஆவேசப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணராமல் அந்த வாகன ஓட்டிகள் இவ்வாறு யானைகளை தொந்தரவு செய்து படம் பிடித்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
- சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய்கடை ஹாப்பிவேலி பகுதியில் சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உபயோகித்து வந்த சிமெண்ட் சாலை பழுதடைந்ததால் அதனை சரி செய்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் மனு மூலமாக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.
பழுதடைந்த சாலை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நுழைவு வரி திட்டம் மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
5 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
- சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு சங்கம் சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி வட்டார தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் ராமு வரவேற்றார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-
சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க
வேண்டும். காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகை மற்றும் பணப்பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை
மற்றும் உணவு மானி யத்தை மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க
வேண்டும். காலிப்பணியி டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சத வீதம் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
- பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்க விட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேபோன்று விளையாட்டுத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-
மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகுபந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஆக்கிப் போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.
எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளியை கைது செய்தனர்.
- சப்- இன்ஸ்பெக்டர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
கூடலூர்,
கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பவுலோஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 15 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை உடனடியாக போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கூடலூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சிபின் நிக்கோலஸ் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.






