search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரை பணயம் வைத்துசெல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
    X

    உயிரை பணயம் வைத்துசெல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

    • வசதிகள் ஏற்படுத்திதர வலியுறுத்தல்.
    • ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோத்தகிரியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்த கிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய தாலுக்காவில் உள்ள அனைத்து தனி யார் ஆம்புலன்ஸ் உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தீபக், மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் அக்கீம், துணைத் தலைவர் இஸ்மாயில், செயலாளர் இஷாத், பொருளாளர் சலமான், கௌரவ தலைவர் மற்றும் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டு மாநில தலைவரிடம் கூறி அவர்களது குறை கள் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில்

    2 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஓட்டுனர்களுக்கு நோயாளிகளை எப்படி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பது என்று விளக்கி கூறினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓன் போர்டு வாகனங்கள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பிரேதத்தை எடுத்துச் சென்றால் ஆர்டிஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களில் வனவிலங்கு தொந்தரவு மற்றும் முறையாக சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் எந்த ஒரு அவசர தேவைக்கும் தங்களின் உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தமிழக அரசு சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×