என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "165 students"

    • அனைத்து திட்டங்களையும் மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • மாணவிகள் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    ஊட்டி,

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் "புதுமைப்பெண்" இரண்டாம் கட்ட திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் புதுமைப் பெண் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு திட்ட கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமை யிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

    புதுமைப் பெண் திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின்கீழ் 6 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே 5. 9.2022 அன்று புதுமைப்பெண் திட்டம் முதற்கட்டமாக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 கல்லூரிகளில் பயிலும் 383 மாணவிகளுக்கு கடந்த 5 மாதங்களில் சுமார் ரூ.19.15 லட்சம் வங்கி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்ட மானது பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவி களுக்கு உயர்கல்வி கற்பதற்கு உதவியாகவும், மாதந்தோறும் அவரவர் வங்கி கணக்கில் தலா ரூ.1,000 உதவித்தொகை பற்று வைப்பதால் தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும்.

    இன்று 2-வது கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்பகல்லூரி, தொழிற்கல்வி பழகுநர் பயிலகம் (ஐடிஐ) என அனைத்து வகையான உயர்கல்விப்படிப்பினை உள்ளடக்கிய 11 கல்லூரி களில் உயர்கல்வி பயிலும் 165 மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்பட்டு பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாடு அரசு செயல்டுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு மாணவிகள் பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்ட ருடன் "நான் புதுமைப் பெண்ணை ஆதரிக்கிறேன்" என்ற வாசகங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மாணவிகள் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    ×