search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambulance Drivers"

    • தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
    • ஆம்புலன்சை இயக்கிய டிரைவர்களை, சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஜார்ஜ். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு குழந்தை பிறந்து 30 நாட்கள் ஆகிறது.

    இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் பூர்ணிமா தனது குழந்தையை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    அங்குபரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு முதுகு தண்டில் நீர் கட்டி இருப்பதாகவும், அத்துடன் ரத்தத்தில் கிருமிகள் பரவியதால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து குழந்தையை 2 நர்சுகளுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சுடன் உதவிக்கு மேலும் 2 ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டன.இதையடுத்து இரவு 10 மணிக்கு இங்கிருந்து புறப்பட்ட ஆம்புலன்சு கடும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே 30 நிமிடத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை அடைந்தது.

    கோவை தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் குழந்தைக்கு அதற்கான சிகிச்சை அளித்து உடனடியாக காப்பாற்றினர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே துரிதமாக ஆம்புலன்சை இயக்கிய டிரைவர்களை, சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.  

    • வசதிகள் ஏற்படுத்திதர வலியுறுத்தல்.
    • ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோத்தகிரியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்த கிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய தாலுக்காவில் உள்ள அனைத்து தனி யார் ஆம்புலன்ஸ் உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தீபக், மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் அக்கீம், துணைத் தலைவர் இஸ்மாயில், செயலாளர் இஷாத், பொருளாளர் சலமான், கௌரவ தலைவர் மற்றும் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டு மாநில தலைவரிடம் கூறி அவர்களது குறை கள் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில்

    2 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஓட்டுனர்களுக்கு நோயாளிகளை எப்படி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பது என்று விளக்கி கூறினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓன் போர்டு வாகனங்கள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பிரேதத்தை எடுத்துச் சென்றால் ஆர்டிஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களில் வனவிலங்கு தொந்தரவு மற்றும் முறையாக சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் எந்த ஒரு அவசர தேவைக்கும் தங்களின் உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தமிழக அரசு சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

    • ஆம்புலன்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர மத்தியில் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் வந்தது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வழிகளில் போக்குவரத்து போலீசாரும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு உதவி செய்தனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து அவரது பெற்றோர் கோத்தகிரியில் இயங்கி வரும் ஒரு ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். உடனடியாக அதன் உரிமையாளர் அக்கீம் என்பவர் ஆம்புலன்சை எடுத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    பின்னர் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கோவை நோக்கி பயணமாகினர். நேற்று கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டு இருந்தது.

    இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒடந்துறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் என்ன செய்வது என யோசித்த ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்பாபு, உடனே மேட்டுப்பாளையம், கோவையில் தனக்கு தெரிந்த சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர்களான அன்சாரி, ஜின்னன், அக்கீம், இன்பா, சதீஷ், கலை ஆகியோர் தங்களது ஆம்புலன்ஸ்சுகளை எடுத்து கொண்டு ஓடந்துறைக்கு சென்றனர்.

    மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர்களும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இப்படி சென்றால் நேரமாகி விடும் என்று, அக்கீம் பாபுவின் ஆம்புலன்சுக்கு முன்பும், பின்பும் ஆம்புலன்ஸ்கள் பின்தொடர்ந்து கோவை வரை பைலட் ஆம்புலன்சுகளாக சென்றன.

    ஆம்புலன்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர மத்தியில் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வழிகளில் போக்குவரத்து போலீசாரும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு உதவி செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் கோவைக்குள் வந்ததும், அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    உடனடியாக அங்கிருந்தும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து வந்து கோவையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக கோத்தகிரியில் இருந்து கோவை வரைக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகமாக இயக்கியதுடன், உதவிக்கு தனக்கு தெரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை அழைத்து மொத்தம் 7 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் மின்னல் வேகத்தில் கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்களின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    ×