என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளி சிறுவர்களை கடிப்பதற்கு துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அங்கிருந்தவர்கள் அந்த தெரு நாய்களை துரத்த முற்பட்டபோது அங்கிருந்த சிற்றுண்டி கடை உரிமையாளரை கடிக்க சென்றதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    எனவே இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி ரோஜா பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

    தற்போது 4,201 வீரியரக ரோஜா ரகங்களில் சுமார் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு கோடை பருவ காலத்தை முன்னிட்டு பூங்காவில் கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

    ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்(பொ) ஷிபிலா மேரி, துணை இயக்குனர்(பொ) பாலசங்கர், உதவி இயக்குநர்கள் அனிதா, ராதாகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    • கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்னர்.

    இந்நிலையில் கோத்தகிரி அருகே அரவேணு கல்லாடா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கோவை சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

    வீட்டின் சமையல் அறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. உடனடியாக அவர் டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது கரடி ஒன்று வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர் வெளியில் சென்று சத்தம் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.

    பின்னர் கரடியை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கரடி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது.

    ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூண்டு வைத்து பிடிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    • வனத் தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், வனத் தீயை கட்டுப்படுத்தும் முறை, குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரா்கள் கலந்துகொள்வாகள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ஊட்டி,

    தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலுள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10-வது பட்டாளியன் படை வீரா்கள் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த கள பயிற்சிக்காக முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பயிற்சி மையத்துக்கு வந்தனா்.

    அவா்களுக்கு முதுமலை வனத்தில் வனத் தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், வனத் தீயை கட்டுப்படுத்தும் முறை, வனத் தீ தடுப்பு உபகரணங்கள் குறித்து வன அலுவலா்கள் மற்றும் பணியாளா்களால் பயிற்சியளிக்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரா்கள் கலந்துகொள்வாகள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • ராணுவ மையம் ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்டது.
    • பேண்ட் வாத்திய குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

    ஊட்டி,

    குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. இந்த ராணுவ மையம் ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பிரிவுகளாக ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது முப்படை ராணுவ பயிற்சிக் கல்லூரியாகவும் உள்ளது. ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ பேண்ட் வாத்தியங்கள் மற்றும் ராணுவத்தின் பல்வேறு பிரிவினா் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவா். அதன்படி, குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டா் சாா்பில் பேண்ட் வாத்திய குழுவினா் ஜனவரி 26 -ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, 2-வது இடத்தை பிடித்தனா். இந்நிலையில் பேண்ட் வாத்திய குழுவினருக்கு வெலிங்டன் முகாம் நுழைவாயிலான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரா்கள் இருபுறமும் நின்று அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். இதில், ராணுவ அதிகாரிகள், வீரா்கள் பலர் கலந்துகொண்டனா்.

    • மணியக்காவை காட்டெருமை ஒன்று திடீரென முட்டி தள்ளியது
    • வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள உல்லத்தட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணியக்கா (வயது50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் மணியக்கா நேற்று காலை தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை தனது கொம்புகளால் முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். தொடர்ந்து காட்டெருமையை விரட்டிவிட்டு காயமடைந்த மணியக்காவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டெருமை தாக்குதலில் படுகாயமடைந்த மணியக்காவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • கலெக்டர் அம்ரித் தலைமையில் புத்தக திருவிழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
    • கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இப்புத்தக திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். கலை நிகழ்ச்சிக்கான கலையரங்கம், உணவரங்கம் போன்ற சிறப்பம்சங்களுடன் பல்வேறு சிந்தனையாளர்களின் சிந்தனை நிகழ்ச்சிகளும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்புத்தக திருவிழா நடைபெறும் இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கை, விழா அழைப்பிதழ்கள், புத்தக அரங்குகள் தயார் நிலையில் வைத்தல், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தல், உணவகம், தற்காலிக ஆவின் பாலகம் ஏற்பாடு, பழங்குடியினர்களின் பொருட்கள் விற்பனை அரங்கம், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை தினந்தோறும் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை பகவத் சிங், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), பூஷணகுமார் (குன்னூர்), ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்
    • இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணை பகுதியில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. சுமார் 510 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காப்புகாட்டில், 10 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 1938ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. மொத்தம் 46.3 அடி உயரம் உள்ள இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையை சுற்றி உள்ள பகுதிகளில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் மனோஜ்பிரபாகர் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    • வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.
    • செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுநா்கள் உறங்குவதை எச்சரிக்கும் வகையில் புதிய செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் தொடங்கி வைத்தாா். வாகன ஓட்டுநா்கள் இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது தங்களை அறியாமலேயே உறங்குவதால் அதிக அளவு விபத்து ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் லேம்ஸ் ஆட்டோ மேஷன் என்ற நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கியுள்ளது. இரவு நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநா்க ளுக்கு உறக்கம் வந்தால் இந்த செயலி வாகன ஓட்டுனா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெடுஞ்சாலை களில் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது இந்த செயலி மூலம் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .

    இந்த செயலியை ஊட்டியை அடுத்த கேத்தி பகுதியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தனியாா் பொறி யியல் கல்லூரியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.கனரக வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினரை அழைத்து இந்த செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

    • அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 50-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை யில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதே பகுதியில் கடந்த சில மாதங்களில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகள் உலா வந்துள்ளது. எனவே அப்பகுதியில் வனத்து றையினர் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்கா ணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவும் இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
    • கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    கோத்தகிரி,

    மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் சம்யூரி இஸ்லாம் (வயது40) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குன்னூரில் இருந்து கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் பணி செய்வ தற்காக அரசு பஸ்சில் சென்றார். பின்னர் அவர் இறங்கும் இடம் வந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்குவதற்க்காக ஓடும் பஸ்சின் படிக்கட்டு பகுதியில் வந்து நின்றார். அப்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. காயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மேல் சிகைச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.
    • அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள சேரங்கோடு காவல் பிரிவில் வனப் பணியாளா்கள் நேற்று மாலை ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வனத்திலுள்ள ஆற்றில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இறந்து கிடந்த யானை ஆண் யானை. அந்த யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் என கூறப்படுகிறது. யானையின் உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிவிலேயே யானை இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கூடலூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி மக்களை மிரட்டி வருகிறது. தேவர்சோலை அடுத்துள்ள செம்பக்கொல்லி கிரா மத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள காப்பித் தோட்டத்தை சுற்றி வலம் வந்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.

    எனவே யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×