என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor Wellington"

    • ராணுவ மையம் ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்டது.
    • பேண்ட் வாத்திய குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

    ஊட்டி,

    குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. இந்த ராணுவ மையம் ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பிரிவுகளாக ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது முப்படை ராணுவ பயிற்சிக் கல்லூரியாகவும் உள்ளது. ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ பேண்ட் வாத்தியங்கள் மற்றும் ராணுவத்தின் பல்வேறு பிரிவினா் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவா். அதன்படி, குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டா் சாா்பில் பேண்ட் வாத்திய குழுவினா் ஜனவரி 26 -ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, 2-வது இடத்தை பிடித்தனா். இந்நிலையில் பேண்ட் வாத்திய குழுவினருக்கு வெலிங்டன் முகாம் நுழைவாயிலான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரா்கள் இருபுறமும் நின்று அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். இதில், ராணுவ அதிகாரிகள், வீரா்கள் பலர் கலந்துகொண்டனா்.

    ×