என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் இறந்து கிடந்த ஆண் யானை
- வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.
- அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள சேரங்கோடு காவல் பிரிவில் வனப் பணியாளா்கள் நேற்று மாலை ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வனத்திலுள்ள ஆற்றில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இறந்து கிடந்த யானை ஆண் யானை. அந்த யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் என கூறப்படுகிறது. யானையின் உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிவிலேயே யானை இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே கூடலூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி மக்களை மிரட்டி வருகிறது. தேவர்சோலை அடுத்துள்ள செம்பக்கொல்லி கிரா மத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள காப்பித் தோட்டத்தை சுற்றி வலம் வந்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.
எனவே யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.