என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    படுக இன மக்களின் கலாசாரம் குறித்து நூல்கள் வெளியீடு
    X

    படுக இன மக்களின் கலாசாரம் குறித்து நூல்கள் வெளியீடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரிமொரா கிராமத்தில் நடைபெற்றது.
    • பண்பாடு குறித்து புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

    ஊட்டி,

    நீலகிரியில் படுக இன மக்களின் மொழி, பண்பாடு, இயற்கையுடன் இணைந்து வாழும் கலாசாரம் அடங்கிய வாரத்தில் 8 நாட்கள், பூஜ்யத்தின் மதிப்பு என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா குன்னூரை அடுத்த கரிமொரா கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாக்கு பெட்ட படுக சமுதாய தலைவா் முருகன் நூல்களை வெளியிட கரிமொரா ஊா் தலைவா் நட்ராஜ் பெற்றுக் கொண்டாா். விழாவில் சிறப்பு விருந்தினராக படுக தேச பாா்ட்டி நிறுவனத் தலைவரும், பாலகொலா ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான மஞ்சை மோகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- படுக மொழிக்கு என்று தனிப்பட்ட எழுத்து இல்லாத நிலையில், படுக மொழிக்கான எழுத்தை வடிவமைக்க விடா முயற்சியை தொடா்ந்து கொண்டிருக்கும் சரவண குமாா் இந்த புத்தகத்தை தமிழ் மொழி கலந்து படுக எழுத்துகளாக உருவாக்கி, படுக இன மக்களின் கலாசாரம், பண்பாடு குறித்து புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

    விரைவில் படுக சமுதாய மக்கள் தமிழக முதல்வரை சந்தித்து படுக மொழிக்கான அங்கீகாரத்தை வழங்கிட வலியுறுத்த உள்ளோம் என்றாா். நிகழ்ச்சியில் குந்தே சீமே பாா்பத்தி அன்னமலை முருகேசன், ஜக்கதா ஆறு ஊா் தலைவா் முருகன், குந்தே சீமே சின்னகனி போஜாகவுடா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×