என் மலர்
நீலகிரி
- கரடி சுற்றித்திரிந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
- கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியாா் நகா் குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி அதிகாலை சுற்றித்திரிந்தது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
- கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
- இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு
பாட்டாளி மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் சார்பில் கட்சி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவுக்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். விழாவில் கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ, மாவட்ட தலைவர் அம்சா, அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் குணசேகரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டனர். இதில் கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் யுவராஜ், ரமேஷ், கணபதி, மணிகண்டன், குணா மகேந்திரன், சிவா மற்றும் மகளிர் அணி சுதா, கோமதி விஜயா, ராஜேஸ்வரி, பரிமளா, கலா, சுகன்யா, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்
- மாநிலங்களின் காவல் அதிகாரிகளுடனான தகவல் பரிமாற்றங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- சட்டவிரோத செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் எல்லையில் உள்ள மாநிலங்களின் காவல் அதிகாரிகளுடனான தகவல் பரிமாற்றங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் தலைமையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள், கா்நாடக மாநில சாம்ராஜ் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில் மாவோயிஸ்ட் நடமாட்டங்கள், எல்லை தாண்டி வரும் தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பல தகவல் பரிமாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாநில எல்லைகள் வழியாக நடைபெறும் சட்டவிரோத செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.
- பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊட்டி,
தேவா்சோலை பேரூராட்சி 3-வது டிவிசனில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து வாா்டு கவுன்சிலா் ரசீனா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கீா்த்தனாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட 16-வது வாா்டில் உள்ள 3-வது டிவிஷனில் உள்ள எஸ்டேட் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். அங்கன்வாடிக்கு என தனிக் கட்டிடம் இல்லை. மேலும், எவ்வித பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனா்.
இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.
தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
- கரகம் பாலித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 28-ம் தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (24-ந் தேதி) வருடாந்திர தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
தொடர்ந்து அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 25-ந் தேதி காலை 6 மணி முதல் விசேஷ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முன்னதாக கரகம் பாலித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
26-ந் தேதி கங்கை பூைஜயும், 27-ந் தேதி இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி திருத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 28-ம் தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
இவ்விழாவையொட்டி நீலகிரி மட்டும் இன்றி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் மேட்டுப்பாளையம், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கூடலூர் வழியாக இயக்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையம், வருவாய், காவல் உள்பட அனைத்து துறையினரும் செய்து வருகின்றனர்.
- ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
- விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் மற்றும் சிறந்த முதல்வர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பார்த்தசாரதி தலைமை வகித்தார். கோவை கற்பகம் பல்கலைக்கழக சிறப்பு பயிற்றுநர் ஆதிபாண்டியன், பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் முதல்வர்களுக்கான விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷன் பேசினார். நிகழ்ழ்சியில் மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள், கப்பத்தொரை ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி செயலாளர் மற்றும் இயக்குநர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பஸ்சில் பைக்காரா அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.
- பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம் காரம் உத்தரவின்பேரில் முரம்பிலாவு மற்றும் கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள் அனைவரும் யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கி, யானைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என சுமார் 60- பேரை பஸ்சில் பைக்காரா அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது. பின்னர் மதிய உணவு வழங்கி அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 83 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில், பந்தலூர் வட்டம் புஞ்சவ யல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காகவும், கோத்தகிரி வட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு பகுதியை சேர்ந்த செல்வன், உதயகுமாருக்கு இந்திய சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவும், மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியிலி ருந்து ரூ.50 ஆயிரம் காசோலையி னையும், மாவட்ட மா ற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6,840 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சார்பில் ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் காசோலைகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தனபிரியா, மணிகண்டன், கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், மோகனகுமாரமங்கலம், ஜனார்த்தனன் (கோத்தகிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன.
- திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.
ஊட்டி
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குன்னூர் அருகே உள்ள தேனலை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சமூக சேவையை வலியுறுத்தும் வகையில் இம்முகாமில் ஒவ்வொரு நாளும் தூய்மைப்பணிகள், கிராம மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நட்டு அதை வளர்த்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று தகவல்களை எடுத்துரைத்து பல்வேறு சாதனை விருதுகளைப் பெற்று வரும் மாணவன் செல்வன் கிரினித் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர்களர்கள், முனைவர் கருப்பாயி, முனைவர் பேமலானி, முனைவர் ரோஸ் மற்றும் லீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோஜாரமணி, ஆசிரியை பவித்ரா மற்றும் ஊர் பிரமுகர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் செல்வன் கிரினித்துக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
- வேலைக்கு சென்ற அந்தோணியம்மாள் தனக்கு கிடைத்த நேரத்தில் தனது தாய் மற்றும் மகள்களிடம் பேசி வந்தார்.
- கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது மகள்கள் மற்றும் தாயாருடன் பேசியுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது44).
இவருக்கு ஆர்த்தி மற்றும் ப்ரீத்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அந்தோணியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து அந்த பகுதியில் தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
அந்த பகுதியில் கிடைத்த சிறிய வேலைகளை செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இருப்பினும் குடும்பத்தை நடத்துவதற்கான பணம் கிடைக்காததாலும், வறுமை காரணமாகவும் அந்தோணியம்மாள் கடந்த 2019-ம் ஆண்டு ஏஜெண்டு ஒருவர் மூலமாக துபாய்க்கு சமையல் வேலைக்கு சென்றதாக தெரிகிறது.
அவரது மகள்களான ஆர்த்தி மற்றும் பிரித்தி ஆகியோர் தங்களது பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள்.
வேலைக்கு சென்ற அந்தோணியம்மாள் தனக்கு கிடைத்த நேரத்தில் தனது தாய் மற்றும் மகள்களிடம் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது மகள்கள் மற்றும் தாயாருடன் பேசியுள்ளார்.
இதுதான் அவர்கள் அந்தோணியம்மாளுடன் கடைசியாக பேசியது. அதன்பின்னர் அந்தோணியம்மாள் இவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
இவர்கள் முயற்சி செய்தாலும் எந்தவித பயனும் இல்லை. இதனால் தற்போது வரை அந்தோணியம்மாளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே துபாயில் சிக்கி தவிக்கும் தங்களது தாயை கண்டறிந்து மீட்டு தர தமிழக அரசும், வெளியுறவு துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோணியம்மாளின் மகள்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது
- பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகரிடம் தெரிவித்தனர். பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகர் முன்னிலையில் வைரம், கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. இவர்களது பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் போஸ்பெராவையொட்டி பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
- அகழியையொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் வெட்டி யானை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி எல்லையில் உள்ளது போஸ்பெரா. இந்த போஸ்பெரா பகுதி அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது.
இங்கு காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் போஸ்பெராவையொட்டி பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை யானைகள் வராமல் இருக்க வெட்டப்பட்ட அகழிக்குள் இருந்து யானை சத்தம் கேட்டது.
இதை பார்த்த பொதுமக்கள் அகழி அருகே சென்று பார்த்தனர். அப்போது காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் அகழிக்குள் நின்றிருந்தது.
உடனடியாக மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அகழிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அகழியையொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் வெட்டி யானை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை தனது குட்டியுடன் மேலே வந்தது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்றது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அதிகாலை நேரத்தில் காட்டு யானை வனத்தைவிட்டு வெளியேறி தனது குட்டியுடன் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக யானை குட்டியுடன் அகழிக்குள் விழுந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்து யானையையும், குட்டியையும் பத்திரமாக மீட்டு வனத்திற்குள் அனுப்பி விட்டோம் என்றனர்.






