என் மலர்
நீலகிரி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜக்கனாரை கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீப காலம் வரை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இந்நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தில் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.
இதனால் காட்டு பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் குப்பைகளை கிளரி விடுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஜக்கனாரை கிராமத்தில் பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி குப்பைகளால் சூழ்ந்துள்ளது இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஜக்கனாரை ஊராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 2 பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது.
ஊட்டி,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 2-வது பெண் குழந்தைக்கு 3 வயது பூர்த்தியாகும் முன்பும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் நிலையான வைப்புத்தொகையும், 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரமும் நிலையான வைப்புத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், 2-வது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தாலும் 2 குழந்தைகளுக்கும் சிறப்பு இனமாக கருதி தலா ரூ.25 ஆயிரத்திற்க்கான பத்திரம் வழங்கப்படும்.
18 வயது நிறை வடைந்தவுடன், மின்விசை நிதி நிறுவனம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும்.
தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் 21.2.2023 வரை ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 வட்டங்களை சேர்ந்த 497 பயனாளிகள் ரூ.1.24 கோடி மதிப்பில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தைகளின் தாயார் வித்யா கூறியதாவது:-
நான் கோத்தகிரி இட்டக்கல் ஒன்னட்டி பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எனக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் ஊரில் உள்ள களப்பணியாளர்கள் இரு பெண் குழந்தைகளுக்கு பணம் பெறும் திட்டம் குறித்து அறிவித்தனர். இதன் மூலம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.
எனது விண்ணப்பத்தினை ஏற்று 2 பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இந்த தொகையின் மூலம் எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தை களின் தாயார் மீனாட்சி கூறியதாவது:-
நான் கூடலூர் அம்பலகொல்லி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் விவசாயம் செய்து வருகிறார்.
எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக நலத்துறையின் சார்பாக 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுவதாக களப்பணியாளர் மூலம் தெரிந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தோம்.
அதன் அடிப்படையில் சமூக நலத்துறை சார்பில் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் பற்று வைக்கப்பட்டு அதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இத்தொகையானது எனது குழந்தைகளின் மேல் படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
- 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைசாவடியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை பந்தலூரிலிருந்து தனது ஆட்டோவில் ராஜேந்திரன் (62) உள்பட 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேங்கோ ரேஞ்ச்சில் பள்ளி சிறுவன் அப்துல்ரகுமான் 7 சாலை குறுக்கே ஓடி உள்ளான். இதில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ சிறுவன் மீது மோதியதோடு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது.
- போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும். இதற்கான தற்போதே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஊட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார், ஊட்டியில் சாலையோரமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து உள்ளவர்களுக்கு கடைகளை உடனடியாக அகற்றும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மார்ச் மாதம் முதல் ஊட்டியில் சீசன் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும் முக்கிய நபர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது. என்றனர்.
- காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
- சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரவேனு,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில் அரவேனு பெரியாா் நகா் பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் குடியிருப்புப் பகுதியில் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடமாடியது அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குடியிருப்புவாசிகளை அச்சமடையச் செய்துள்ளது.
இந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
- 2.0 மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாம்’ என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.
- சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்பும் தளமாகவும் அமையும்.
ஊட்டி,
ஊட்டி மாவட்ட அலுவலகம் அமலாக்க அதிகாரி மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் சட்டரீதியாக இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் 'நிதி ஆப்கே நிகட் 2.0 - மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாம்' என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.
இது ஒரு ஒத்திசைவான, விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறையாக இருக்கும், இது குறை தீர்க்கும் தளமாகவும், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தகவல் பரிமாற்ற மேடையாகவும் செயல்படும்.
நீலகிரி மாவட்டத்திற்கான 'நிதி ஆப்கே நிகட் 2.0' வருகிற 27-ந் தேதி தோட்டக்கலை வளாகம் சார்ரிங் கிராஸ், ஊட்டி என்ற முகவரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இந்த மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாமின் ஒரு பகுதியாக, வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம் 1952, அதன் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்கள், தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதலாளிகள், முதன்மை முதலாளிகள்*, ஒப்பந்ததாரர்களுக்குக் கிடைக்கும் ஆன்லைன் சேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படும்.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் புதிய முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்பும் தளமாகவும் அமையும்.
தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் கவனித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவார்கள்.
நிதி ஆப்கே நிகட்டில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலாளர்கள், முதலாளிகள் இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.
- 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தாடா பகுதியில் மலை ெரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள வனத்தில் வெயிலின் காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அருகில் இருந்த செடி, கொடிகள் மீது பரவியது. இதில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் இருந்த செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊட்டி தீயணைப்புத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். வனப்பகுதியில் காட்டுத் தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.
- 3 பகுதிகளை இணைக்ககூடிய பகுதியாக கட்டப்பெட்டு பகுதி உள்ளது.
- சுற்றுலா வரும் பயணிகள் மட்டுமின்றி இங்கு கடை நடத்தி வருபவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி பகுதிகளை இணைக்ககூடிய பகுதியாக கட்டப்பெட்டு பகுதி உள்ளது.
அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். குறிப்பாக சீசன் காலங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான கடைகளும் உள்ளன. இப்படி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரக் கூடிய இடமான இந்த கட்டபெட்டு பகுதியில் ஒரு கழிவறை வசதி கூட இல்லை. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மட்டுமின்றி இங்கு கடை நடத்தி வருபவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆனந்தன் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
- செந்நாய்கள் எருமையை வேட்டையாடியது தெரியவந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று வீட்டில் வளர்த்த எருமை கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். அப்போது அருகே இருந்த புல்வெளியில் கன்றுகுட்டி இறந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கலைக்கோவில், வி.ஏ.ஓ.கர்ணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் செந்நாய்கள் எருமையை வேட்டையாடியது தெரியவந்தது.
கால்நடை டாக்டர் ராஜராஜன் பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில்,' இந்த பகுதியில் கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி வரும் நிலையில், கால்நடை வளர்ப்போர் அவற்றை பாதுகாக்க வேண்டும். மக்களும் இரவில் இப்பகுதிகளில் நடமாட கூடாது,' என்றனர்.
- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது.
தொடர்ந்து பசும் புற்கள் கருகி வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கவனக்குறைவாக வீசி செல்கின்றனர்.
இதனால் காய்ந்து கிடக்கும் புற்கள், செடி, கொடிகளில் எளிதில் தீ பரவி விடுகிறது. தொடர்ந்து காட்டுத்தீயாக உருமாறி விடுகிறது.
இதில் வனத்தில் உள்ள அரிய வகை தாவரங்கள், மரங்கள், சிறு வன உயிரினங்கள் எரிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் மக்கள் பயன்படுத்தும் சாலையோரங்களில் பல மீட்டர் அகலத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம் மசினகுடி - ஊட்டி நெடுஞ்சாலையோரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். இதைத்தொடர்ந்து தமிழக- கர்நாடக எல்லையான கக்கநல்லா முதல் தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி வழியாக கூடலூர் வரும் தேசிய நெடுஞ்சாலையோரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தூரம் வரையறுத்து காய்ந்த புற்களை தீ வைத்து எரித்து பாதுகாப்பாக அணைப்பது தீத்தடுப்புக்கோடு ஆகும். இதில் தீப்பெட்டி குச்சிகள், புகையும் சிகரெட் துண்டுகளை வீசினால் எளிதில் தீ பிடிக்காது.
இதன் மூலம் காட்டுத்தீ பரவாமல் வனப்பகுதியை பாதுகாக்க முடியும்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வனத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு அளித்தால் வனத் தீ ஏற்படாமல் தடுக்கலாம்.
- தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
- 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் முதல் ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் மலைப்பாதையில் சாலையின் இரு புறமும் மண் மற்றும் ராட்சத பாறைகள் அகற்றி விரிவுபடுத்தும் பணியானது நடந்து வருகிறது.
இதேபோல் தற்போது குன்னூர் முதல் ஊட்டி வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது முழு வீச்சில் நடக்கிறது. இந்த நிலையில் வெலிங்டன் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது சாலை விரிவாக்க பணி நடந்து வருவதால், அங்கு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் தாங்களாகவே இடிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையை துறையினர் இடித்து, அதற்கான தொகையை வசூல் செய்ய உள்ளதாகவும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனால் இதனால் அந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்திரஜித் கூவமூலாவில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி உள்ளார்.
- அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, காட்டுப்பன்றியை விரட்டினார்கள்.
ஊட்டி
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 52). விவசாயி. கூவமூலாவில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி உள்ளார். அந்த தேயிலை தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை திடீரென தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, காட்டுப்பன்றியை விரட்டினார்கள். பின்னர் படுகாயம் அடைந்த இந்திரஜித்தை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுறித்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வருவாய் ஆய்வாளர் லட்சுமிசங்கர் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், வனகாப்பாளர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு சென்று இந்திரஜித்துக்கு ஆறுதல் கூறினர்.






