கட்டபெட்டில் கழிவறை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை

3 பகுதிகளை இணைக்ககூடிய பகுதியாக கட்டப்பெட்டு பகுதி உள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் மட்டுமின்றி இங்கு கடை நடத்தி வருபவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர்.
கட்டபெட்டில் கழிவறை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
Published on

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி பகுதிகளை இணைக்ககூடிய பகுதியாக கட்டப்பெட்டு பகுதி உள்ளது.

அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். குறிப்பாக சீசன் காலங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான கடைகளும் உள்ளன. இப்படி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரக் கூடிய இடமான இந்த கட்டபெட்டு பகுதியில் ஒரு கழிவறை வசதி கூட இல்லை. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மட்டுமின்றி இங்கு கடை நடத்தி வருபவர்களும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com