என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.
    • 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மா்க்கஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவில் 37 இந்து ஜோடிகளுக்கு அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும், 3 கிறிஸ்தவ ஜோடிகளுக்கு தேவாலயத்திலும், 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவா்களது முறைப்படியும் திருமணங்கள் நடைபெற்றன.திருமணத்துக்கு சீா்வரிசையாக ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவை பொன்மலை அப்துல் காதா் முஸ்லியாா் தொடங்கி வைத்தாா். சமஸ்தா தலைவா் சுலைமான் முஸ்லியாா், மா்க்கஸ் நிா்வாக அப்துல் சலாம் முஸ்லியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா்.

    • 403 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 403 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள், கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சுய உதவி குழுக்கள், எஸ்டேட் நிறுவனத்தினர் ஆகியோரோல் நடத்தப்படுகிறது.இவற்றில் பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடைகளை சீரமைப்பது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கோத்தகிரியில் கோழிக்கரை, குஞ்சப்பனை, கொட்டக்கம்பை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தாலும் செம்மனரை ரேஷன் கடை பர்ன்சைடு எஸ்டேட் நிர்வாகத்தாலும் சீரமைக்கப்பட்டுள்ளன.

    கூடலூரில் ஸ்ரீமதுரை 1 மற்றும் 11 கொங்கர்மூலா, மண்வயல், குச்சி முச்சி, போஸ்பரா ஆகிய ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டியில் பிங்கர் போஸ்ட் 1 மற்றும் 11, குன்னூர் வட்டத்தில் எடப்பள்ளி ரேஷன் கடை ஆகியவை நீலகிரி மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர் சங்கம் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 மாதங்களாகவே கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது
    • தேயிலை செடிகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகவே கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. தற்சமயம் பனிப்பொழிவின் தாக்கம் குறைந்த நிலையில் பகல் பொழுதுகளில் வெயில் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கோத்தகிரி பகுதிகளில் தேயிலை செடிகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அதிகப்படியான பனிப்பொழிவு வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் தேயிலை செடிகள் காய்ந்து வருகின்றது.இதனால் வருமானமின்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். மாடுகள் அனைத்தும் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த மூடப்படாத 20 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த நிலைய அலுவலர் மாதன் மற்றும் கருப்பசாமி தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

    • 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

    ஊட்டி 

    ஊட்டி அருகே மைனலா அரக்காடு சந்திப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேத்தி பேரூராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஊட்டியிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், முறையாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது
    • புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மாா்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வரும் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம். நீலகிரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் ஒருங்கிணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.இந்தப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் இத்திருவிழாவில் இடம் பெறவுள்ளன என்றாா்.

    • கிராமங்களுக்கு செல்ல பயன்படுத்தும் முக்கிய சாலையாக கிளப்ரோடு சாலை உள்ளது.
    • போக்குவரத்து நெரிசலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கோத்தகிரி

    கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இருந்து மற்ற கிராமங்களுக்கு செல்ல பயன்படுத்தும் முக்கிய சாலையாக கிளப்ரோடு சாலை உள்ளது. குறுகிய சாலையாக இருக்கும் இந்த சாலையின் இருப்புறங்களிலும் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் தங்களின் வானங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் இந்த சாலையில் பஸ்கள், லாரிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் என எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு அதனை சரிசெய்ய மணிக்கணக்கில் நேரம் ஆகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்

    கோத்தகிரி,

    கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும்.

    இந்த பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1985 ஆம் ஆண்டு 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ரூ.1½ லட்சம் மதிப்பில் பள்ளிக்கு நவீன வசதிகளுடன், ரெக்கார்டிங் வசதி கூடிய தொடுதிரை ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் தலைமை வகித்து, வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி நூற்றாண்டு விழா கமிட்டியை சேர்ந்த சசிகுமார், சந்தோஷ், ஓய்வு பெற்ற ஆசிரியைகள் மீராபாய், அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாணவர்கள் முகமது அலி, ராவணன், மைதிலி, சாதிக் அலி, நாகராஜ், பரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து சென்னையை சேர்ந்த பொறியாளர் கார்த்திகேயன் ஸ்மார்ட் வகுப்பறையின் சிறப்பு அம்சங்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் கடந்த 37 வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை மட்டுமின்றி, தினமும் பள்ளியில் குழந்தைகள் திருக்குறள் எழுதி வைக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை மற்றும் ஒயிட் போர்டு ஆகியவற்றையும் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சுந்தர் நன்றி கூறினார் 

    • 20 ஆயிரம் ட்ரவுட் மீன் முட்டைகளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் அரசு ட்ரவுட் மீன் பண்ணையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது
    • 6ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை, மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறிதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையின்படி, 20 ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் முட்டைகளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் அரசு ட்ரவுட் மீன் பண்ணையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அவலாஞ்சி அரசு டிரவுட் மீன் பண்யிைல் இருப்பு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 20ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் இருப்பு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    இன்றைய தினம் 20ஆயிரம் டிரவுட் மீன் முட்டைகளில், தற்போது 14ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகளில் முதற்கட்டமாக அவலாஞ்சி அணையில் 6ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2-வது கட்டமாக மீதமுள்ள டிரவுட் மீன்குஞ்சுகள் லக்கடி, மேல்பவானி, தேவர்பேட்டா மற்றும் எமரால்டு நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இருப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் தில்லைராஜன், ஊட்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் (கூ.பொ) முனைவர் கதிரேசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டத்தின் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு இருதய பரிசோதனை முகாமினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்பு இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறிதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஊட்டத்தினை உறுதிசெய் என்ற ஒரு சிறந்த திட்டத்தினை நமது மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அங்கன்வாடி மையங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பள்ளி சிறார் குழந்தைகள் நலதிட்ட குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் நமது மாவட்டத்திலுள்ள பொது சுகாதாரதுறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டத்தின் 8 குழுக்கள் மூலம் பிறந்த குழந்தைகளும், அங்கன்வாடி மையங்களிலும், பள்ளிகளிலும் பயில்கின்ற 19 வயது வரை உள்ள குழந்தைகளை பரி சோதனை செய்யப்பட்டதில் 237 குழந்தைகளுக்கு இருதய பிரச்சனைகளுக்கான அறிகு றிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    இன்றைய தினம் சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய சிறப்பு நிபுணர் இக்குழந்தைகளுக்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் எக்கோ பரிசோதனை மூலம் இருதய பிரச்சனைகள் உறுதி செய்யப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். எனவே, இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

    இம்முகாமில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் முத்துக்குமரன், சரண்யா, குழந்தைகள் நல மருத்துவர்கள் உமாதேவி, நளினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை போடப்பட்டது.
    • தரமில்லாத சாலையை அமைத்தது பற்றி கேள்வி எழுப்பினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட காம்பைக்கடை ஹாப்பிவெலி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை போடப்பட்டது. தரமின்றி போடப்பட்ட சிமெண்டு சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் அந்த சாலையை மீண்டும் மறு சீரமைப்பு செய்து தர வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

    இதனையடுத்து சாலை மறு சீரமைப்பு குறித்து மாலைமலர் செய்தி நாளிதழில் கடந்த 7-ந் தெதி செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தி வாட்ஸ்அப் மூலம் கோத்தகிரி பகுதிகளில் வைரலாகியது. உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரரை அழைத்து தரமில்லாத சாலையை அமைத்தது பற்றி கேள்வி எழுப்பினர்.

    பின்பு அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்ட அந்த சாலையை மறு சீரமைத்து தர அந்த ஒப்பந்ததாரரிடம் உத்தரவு பிறப்பித்தனர். அதன் விளைவாக இன்று அந்த சாலையை சீர் செய்தனர். செய்தி வெளியிட்டு சாலையை சீரமைத்து தந்ததற்காக அப்பகுதி மக்கள் மாலைமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கல்லட்டி மலைப் பாதையை உள்ளுா் மக்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த அனுமதி வழங்கி வழிவகை செய்யப்பட்டது.
    • இரவு நேரங்களில் கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் உள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ளனா்.

    ஊட்டி,

    மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவிலுக்கு செல்லும் உள்ளுா் வாகனங்கள் கல்லட்டி மலைப் பாதையை இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இது குறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீசார் சாா்பில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர உட்கோட்டம், புதுமந்து போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சாலையாக உள்ளது.

    இதனால் கல்லட்டி மலைப் பாதையை உள்ளுா் மக்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த அனுமதி வழங்கி வழிவகை செய்யப்பட்டது. மேலும் மசினகுடி மற்றும் மாவணல்லா சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில நபா்கள் சொந்த இடம் வைத்திருந்தால் அவா்கள் அந்த வழியாக பயணிக்க வேண்டும் எனில் கண்டிப்பாக போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தின் ஓட்டுநா் உரிமம் கொண்டவா்கள் அனுமதி சீட்டு இல்லாமல் இந்த வழியே பயணிக்கலாம். விபத்தை தடுக்கவும், வன விலங்கு-மனித மோதலை தடுக்கவும் இரவு நேரங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உள்ளுா் வாகனங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில், மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு செல்லும் உள்ளுா் வாகன ஓட்டிகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கல்லட்டி மலைப் பாதையில் செல்ல மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீசார் சாா்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளியூா் வாகன ஓட்டிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இரவு நேரங்களில் கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் (உள்ளுா் மற்றும் வெளியூா்) உள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ளனா்.

    • சமையலா்களை நியமிக்க ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
    • மரினா வீட்டிலும் ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை மேற்கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 2020-2021-ம் ஆண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரியாக மரினா(வயது50) பணிபுரிந்தாா். இவா் பணிபுரிந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் பள்ளிகள் மற்றும் ஆதிவாசி உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா்கள் நியமிக்கும் பணி நடைபெற்றது.அப்போது 25 சமையலா்கள் தேவையான இடத்தில் 31 பேரை அதிகாரி மரினா நியமித்ததாக கூறப்படுகிறது.

    இதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக அப்போதே ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் வந்தது.

    இதற்கிடையே ஆதிதிராவிட நல அதிகாரி மரினா அரியலூா் மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். அங்கும் பணியில் இருந்தபோது செய்த சில முறைகேடுகளால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

    இந்த நிலையில் மரினா, சமையலா்களை நியமிக்க ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

    இதற்கான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

    இதற்கிடையே சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள மரினா வீட்டிலும் ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

    ×