நீலகிரி மாவட்டத்தில் புத்தக திருவிழா

புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்.
நீலகிரி மாவட்டத்தில் புத்தக திருவிழா
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மாா்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வரும் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம். நீலகிரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் ஒருங்கிணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.இந்தப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் இத்திருவிழாவில் இடம் பெறவுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com