என் மலர்tooltip icon

    நீலகிரி

    • லாலி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன.
    • அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழுவினா் சிறப்பு ஆய்வு செய்துள்ளனா்.

    ஊட்டி,

    குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனை நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த அரசு லாலி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனையில் மத்திய குழு மருத்துவா்கள் அரவிந்த் ஜெயின், ரெஜி குமாா், சஞ்சுலால் பாா் யுவா ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனா். மூன்றாவது நாளாக நேற்றும் ஆய்வு மேற்கொண்டனா்.

    இது குறித்து மருத்துவா்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழுவினா் சிறப்பு ஆய்வு செய்துள்ளனா். மருத்துவமனையை மேம்படுத்துதல், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்துள்ளனா். இது குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவா் என்றனா்.

    ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பழனிசாமி, மருத்துவமனை முதன்மை மருத்துவா் விஸ்வநாதன், மருத்துவர் ரமேஷ் ஆகியோா் உடன் இருந்தனா். 

    • மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
    • இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

     குன்னூர்

    தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதியவர்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் காசநோய் பிரிவு சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் தொழிலாளர்களுக்கு காசநோய் மற்றும் நுரையிரல் சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் எம்.ஏ.ரகீம் மற்றும் தலைமை மருத்துவ சூப்பர்வைசர் சரத்குமார், ஆண்டனி செபஸ்டின், ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொரையட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது.
    • டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் இருந்து தொரையட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் தொரையட்டி கிராமத்திற்கு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறுவதற்காக சென்று கொண்டிருந்தனர். காவியலோரை பகுதியில் சென்றபோது எதிரில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. குறுகலான சாலை என்பதால் பஸ்சை சாலையோரம் நிறுத்துவதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இறங்கி, அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. பெண் சாவு இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) கண்மணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் காரபிள்ளு பகுதியை சேர்ந்த பாஞ்சாலி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக பாஞ்சாலி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து தேனாடு கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து அந்தமொக்கை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் மலைப்பகுதியில் வளர்ந்திருந்த காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடிகொடிகள் திடீரென பற்றி எரிய தொடங்கின. இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பில் இருந்த புல்வெளிகள் எரிந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    • மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மக்கள் அமைப்பு சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி மார்க்கெட் திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்ஜெட் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வம், மகேஷ், யோகராஜ் மற்றும் மக்கள் அமைப்பு சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேரோட்டத்தை கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
    • காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பிரசித்திபெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

    25-ந் தேதி காலை 6 மணிக்கு விசேஷ பூஜைகளும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும், அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 26-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆற்றங்கரைக்கு சென்று கங்கை நீர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

    அதனைத்தொடர்ந்து தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் நள்ளிரவு கோவிலை அடைந்தது. முன்னதாக மைசூரு மற்றும் ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீச்சட்டி, பூங்கரகம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல் ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தமிழக அரசின் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டதால் பொக்காபுரம் முதல் மசினகுடி வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    இதனால் 4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆனது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். 

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏற்பாடு
    • இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஜான் சலீவன் நினைவுநாளை கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாகவும், வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாகவும், அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஆ.ராசா எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஆ.ராசா எம்.பி தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சர் சென்ற ஆண்டு நீலகிரி மாவட்டத்தில், தொடக்க விழாவினை தொடங்கி வைத்து, இவ்விழா கொண்டாடுவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிறைவு விழாவினையொட்டி புத்தககண்காட்சி, புகைப்படகண்காட்சி, குறும்பட போட்டி, திரைப்பட விழா, பழங்குடியின மக்களின் கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த வாரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். மேலும் இந்த 200-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டு வர வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கைகள் வைத்துள்ளோம் என கூறினார். மறைந்த ஜான் சலீவன் நினைவினை போற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 108 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், இக்கூட்டத்தில், பந்தலூர் வட்டம் கையுண்ணி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை கேட்டு மனு அளித்ததை தொடர்ந்து, உடனடியாக பரிசிலனை செய்ய உத்தரவிட்டு, சம்மந்தப்பட்ட நபருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவினை முன்னிட்டு, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சார்பில் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ரூ.30 ஆயிரத்திற்க்கான வங்கி வரவோலையை கலெக்டரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ெரயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மது அருந்துவதன் மூலம் கல்லீரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, குடும்பத்தில் பிரச்சினை, கடன் வாங்குதல், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவதன் மூலம் விபத்து போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே, மது அருந்துதல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    • தங்கியிருந்த வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

     ஊட்டி,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புலியை வேட்டையாடியதாக கூறப்படும் நீலகிரி வனப்பகுதியில், கடந்த வாரம் அவர்களை அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், புலியை வேட்டையாட பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்ட கருவிகள், தற்காலிக கூடாரம், பாத்தி ரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் கொடூரமாக வேட்டை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், வட மாநில கும்பல் தங்கி இருந்த எடக்காடு தக்கர் பாபா நகர் பகுதியில் வனத் துறையினர் மற்றும் எமரால்டு போலீசார் நேற்று தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர். சில வீடுகளுக்குள் புகுந்து சோதனை செய்தனர்.இதுகுறித்து வனத்துறையினர்கூறியதாவது:-

    இப்பகுதியில் கம்பளி விற்பனை செய்வதுபோல வட மாநில கும்பல் வந்து, 2 ஆண்டுகள் வரை தங்கி இருந்து புலி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்கு வசிக்கும் உள்ளூர் நபரின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளனர். அந்த நபரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, இந்த சம்பவம் நடைபெற்ற சமயங்களில் யார், யாருக்கு தொடர்பு கொண்டனர் என்ற விவரங்கள் சேகரிக்க ப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அவர்கள் அங்கு தங்கியிருந்த போது என்ன வேலைக்கு சென்றார்கள்? யாருடன் நெருங்கி பழகினார்கள்? சொந்த ஊருக்கு சென்று வந்தா ர்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம். இதற்கிடையே சோதனை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டையாடி மான் கொம்பு எடுத்துவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்
    • மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்ஜெட் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்க்கு மணிகண்டன் தலைமை தாங்கினார், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் செல்வம், மகேஷ், யோகராஜ் மற்றும் மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • புலியை வேட்டையாட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகள், தற்காலிக கூடாரம், பாத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • சோதனை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து புலியை வேட்டையாடியதாக கூறப்படும் நீலகிரி வனப்பகுதியில், கடந்த வாரம் அவர்களை அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், புலியை வேட்டையாட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகள், தற்காலிக கூடாரம், பாத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் கொடூரமாக வேட்டை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இந்நிலையில், வட மாநில கும்பல் தங்கி இருந்த எடக்காடு தக்கர் பாபா நகர் பகுதியில் வனத் துறையினர் மற்றும் எமரால்டு போலீசார் நேற்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சில வீடுகளுக்குள் புகுந்து சோதனை செய்தனர்.

    இப்பகுதியில் கம்பளி விற்பனை செய்வதுபோல வட மாநில கும்பல் வந்து, 2 ஆண்டுகள் வரை தங்கி இருந்து புலி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்கு வசிக்கும் உள்ளூர் நபரின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளனர். அந்த நபரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, இந்த சம்பவம் நடைபெற்ற சமயங்களில் யார், யாருக்கு தொடர்பு கொண்டனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அவர்கள் அங்கு தங்கியிருந்த போது என்ன வேலைக்கு சென்றார்கள்? யாருடன் நெருங்கி பழகினார்கள்? சொந்த ஊருக்கு சென்று வந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம்.

    இதற்கிடையே சோதனை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டையாடி மான் கொம்பு எடுத்துவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும்.
    • இந்த ஆண்டு மலா் கண்காட்சிக்காக ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே மலரும் துலிப் மலா்கள் முதன்முறையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் மூலம் வளா்க்கப்பட்டன.

    ஊட்டி:

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.

    சுற்றுலா பயணிகள், இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

    இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 12,855 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனா்.

    பெரும்பாலானவா்கள் கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனா். வெளிநாட்டினரும் அதிக அளவு வருகை தந்திருந்தனா். இவா்கள் மலை ரெயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டினா்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு மலா் கண்காட்சிக்காக ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே மலரும் துலிப் மலா்கள் முதன்முறையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் மூலம் வளா்க்கப்பட்டன.

    பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் துலிப் மலா்கள் வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் மற்றும் ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

    • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர் வயல் கிராமம் உள்ளது.
    • இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர் வயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வாடிக்கையாகி வருகிறது.

    அல்லூர் வயல் கிராமத்தை சேர்ந்தவர் கரும்பன்(70). இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென கரும்பனை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரும்பனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். கரும்பனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து அழுதனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து உடலை எடுக்க சென்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, பலமுறை ஊருக்குள் யானை வருகிறது என கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உயிரிழப்பு சம்பவம் நடந்து விட்டது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    ×