search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் ஜான்சலீவன் நினைவை போற்றும் வகையில் விழா
    X

    ஊட்டியில் ஜான்சலீவன் நினைவை போற்றும் வகையில் விழா

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏற்பாடு
    • இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஜான் சலீவன் நினைவுநாளை கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாகவும், வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாகவும், அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஆ.ராசா எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஆ.ராசா எம்.பி தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சர் சென்ற ஆண்டு நீலகிரி மாவட்டத்தில், தொடக்க விழாவினை தொடங்கி வைத்து, இவ்விழா கொண்டாடுவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிறைவு விழாவினையொட்டி புத்தககண்காட்சி, புகைப்படகண்காட்சி, குறும்பட போட்டி, திரைப்பட விழா, பழங்குடியின மக்களின் கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த வாரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். மேலும் இந்த 200-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டு வர வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கைகள் வைத்துள்ளோம் என கூறினார். மறைந்த ஜான் சலீவன் நினைவினை போற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 108 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், இக்கூட்டத்தில், பந்தலூர் வட்டம் கையுண்ணி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை கேட்டு மனு அளித்ததை தொடர்ந்து, உடனடியாக பரிசிலனை செய்ய உத்தரவிட்டு, சம்மந்தப்பட்ட நபருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவினை முன்னிட்டு, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சார்பில் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ரூ.30 ஆயிரத்திற்க்கான வங்கி வரவோலையை கலெக்டரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ெரயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மது அருந்துவதன் மூலம் கல்லீரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, குடும்பத்தில் பிரச்சினை, கடன் வாங்குதல், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவதன் மூலம் விபத்து போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே, மது அருந்துதல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×