என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோடை சீசனை வரவேற்கும் விதமாக தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன.
    • சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம்பெறுவது வழக்கம்.

    சீசனுக்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டன. அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    செடிகளுக்கு இயற்கையாக உரம் இடுவது, களை எடுப்பது, நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது என பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கோடை சீசனை வரவேற்கும் விதமாக தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை நடைபாதையில் நடந்து சென்றபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    இதுகுறித்து பூங்கா நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஒவ்வொர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி கடந்த மாதம் கலெக்டர் முன்னிலையில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒருபுறம் அப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக தற்போது பூக்கும் வகையில் 1-வது மற்றும் 5-வது அடுக்கில் மட்டும் நவம்பர் மாதத்திலேயே கவாத்து செய்யப்பட்டு விட்டது.

    இதனால் தற்போது அந்த இரண்டு அடுக்குகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தொடர்ச்சியாக கோடை சீசனுக்கும் பூத்து குலுங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் நாட்டிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதினை கடந்த 2006-ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு உலக ரோஜா சம்மேளனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • உதகை நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
    • காட்டுப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    நீலகிரி:

    நீலகிரியில் உள்ள கவர்னர் சோலை, பார்சன்ஸ்வேலியில் உள்ள வனப்பகுதிகளில் இன்று திடீரென தீப்பற்றியது. இந்த காட்டுத்தீ வேகமாக பரவி காய்ந்த செடிகொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன.

    நகரின் முக்கிய பகுதிகள் அருகே உள்ள குப்பை குழி பகுதியிலும் தீ பரவியது. இதனால் மின்விநியோகம் தடைப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியிலும் தீ பரவியது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயால் நீலகிரியில் 200 ஏக்கர் வனப்பகுதி சாம்பலானது. உதகை நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.

    தீ பரவும் காட்டுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், காட்டுத் தீ பரவ சமூக விரோதிகள் யாராவது காரணமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • வளா்ப்புக் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வாழைத்தோட்டம் பகுதியில் தொடங்கியது.
    • 4 குழுக்களாகப் பிரிந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்பக நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து முதுமலை புலிகள் காப்பகம் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள வளா்ப்புக் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வாழைத்தோட்டம் பகுதியில் தொடங்கியது. மசினகுடி கோட்டத்துக்கு உள்பட்ட மசினகுடி, மாயாறு, மாவனல்லா, சொக்கநள்ளி, ஆனைகட்டி, சிறியூா், சிங்காரா, சீகூா் வனச் சரகங்களில் கால்நடை மருத்துவக் குழுவினரும், வனத் துறையினரும் இணைந்து 4 குழுக்களாகப் பிரிந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சிவகணேசன், மருத்துவா்கள் ராஜமுரளி, பவித்ரா, நந்தினி, சதீஷ் மற்றும் வனச் சரக அலுவலா்கள் பாலாஜி, ஜான் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் தொரை கொடியேற்றி வைத்தார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நகர துணை செயலாளர் ரீட்டாமேரி பர்னபாஸ், நகர பொருளாளர் அணில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், ஜெயராமன், மார்கெட் ரவி, தியாகு, சசிகுமார், ராஜன், அமலநாதன், மல்லிகொரை மூர்த்தி, தர்மராஜ், ஆல்துரை, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கஜேந்திரன், விஷ்னு, ரகுபதி, கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பர்னபாஸ், வெங்கடேஷ், ஸ்டான்லி, பாபுராஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், பௌ்ளன், செல்வம், காளி, மாதன், ராஜேஷ் மற்றும் இளைஞர் அணியினர் விவேக், மீன்ராஜ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காந்தி திடலில் வைத்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட கூடலூர் நகர தி.மு.க சார்பில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் வைத்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூடலூர் நகர கழகத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கினர். பின்னர் மாக்கமூலவில் உள்ள மனம் நலம் குன்றிய மானவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. விழாவில் கூடலூர் நகர துணை செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், நாகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், மணிகண்டன் பொருளாளர் தமிழழகன், தலைமை கழக பேச்சாளர் தங்கராஜ், மாவட்ட அமைப்பாளர் ரெனால்ட், முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், நகர மன்ற தலைவி பரிமளா, வார்டு கழக செயலாளர் சுப்பையா, சிவசாமி, அசைனர், ராஜகோபால், சின்னையன், ராஜு, கிருஷ்ணமூர்த்தி, மல்லிகராஜ், பிரகாஷ், ராஜா, கருணாநிதி, சடைய பிள்ளை, இஸ்மாயில், கனகராஜ், தாகீர், பரசுராமன், நகரமன்ற உறுப்பினர்கள் வெண்ணிலா, சத்தியசீலன், தனலட்சுமி, ஆபித பேகம், கௌசல்யா, மும்தாஜ், சகுந்தலா, நிர்மல், உஷா, முன்னாள் நகர மன்ற தலைவர் அன்னபுவனேஸ்வரி, இளைஞர் அணி விஜயகுமார், ராமன், அபுதாகிர், புட்ராஜ், நாகேஷ், செல்வபாரதி, செல்லதுரை, நடராஜ், சந்தோஷ், மதிவாணன், இஸ்மாயில், சிங்கப்பூர், கணேசன், ஜெகநாதன், ஆசாத், செல்வநாதன், மணிவண்ணன், தொ.மு.ச நிர்வாகிகள் ரகுபதி, சிவக்குமார், சரவணகுமார், மாணிக்கம், ராஜேந்திரன், அந்தோணிகுருசு, ஜெயக்குமார், கலைக்குமார், விஜயகுமார், கண்ணன், ஜோசப், அசரப் சக்திவேல், புஷ்பராஜ், மூசா, செல்லதுரை, சாமிநாதன், சாமுவேல், லோகநாதன், குமார், தம்பிராஜ், பிரகாஷ், ராமச்சந்திரன், தர்மராஜ், சிவராமன், பரமன், செல்வராஜ், சிவன், ஜோசப், பெர்னாட், ராணி, செல்லம், ருக்மணி, சசிகலா, கலைமலர், சாரா, நூர்ஜகான், லட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • 3-வது சுற்று இலவச கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டதில் கால்நடை பராமரிப்பு–த்துறை சார்பில் 3-வது சுற்று இலவச கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கால்நடை–களுக்கான அடையாள அட்டையும் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 28,500 கால்நடைகளுக்கு வருகிற 21-ந் தேதி வரை 26 குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து கால்நடை–களுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்த வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் 125 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் பயன் பெற்ற அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கலெக்டர் அம்ரித், கலெக்டர் அலுவலகத்தில், எஸ்.பி.டி மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் நீலகிரியில் இருந்து கோவை, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ரெயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பகவத் சிங், ஆவின் பொது மேளாலர் வெங்கடாச்சலம், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சிவக்கிருஷ்ணன், ஊட்டி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பார்த்தசாரதி, கூடலூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் நீலவண்ணன், ஆவின் துணை பொது மேளாலர் சிவசங்கர், சைலேந்திரகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் முதுமலை புலிகள் காப்பகம் அருண், எஸ்.பி.டி மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள் (ஆர்.டி.ஒ டிரஸ்ட்) நிர்வாக இயக்குநர் பெருமாள், எஸ்.பி.டி நிறுவனத்தின் செயல் அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • லாரியில் இருந்து மெத்தனால் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தீ விபத்து ஏற்படாமல் தடுத்து கசிவை அடைத்து வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

    ஊட்டி,

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கூடலூா் அடுத்துள்ள கோழனிப்பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது உரசியதால் டேங்கரில் இருந்து மெத்தனால் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து கூடலூரில் இருந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீ விபத்து ஏற்படாமல் தடுத்து கசிவை அடைத்து வாகனத்தை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

    • தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தி.மு.க. சார்பில் பிரசார கூட்டம் நடந்தது.

    இந்த பிரசாரத்தின் போது தி.மு.க சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.

    இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணையும் நடைபெற்றது.

    மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ் இனியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
    • ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்கள் மலை காய்கறிகள் மட்டுமின்றி ஏற்றுமதி தர வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

    கூக்கல்தொரை விவசாயிகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரையும், ஓடேன் ஓடையை நம்பி எரிசிபெட்டா, ஓடேன்துறை கிராம விவசாயிகளும், காக்காசோலை ஓடையை நம்பி அப்பகுதி விவசாயிகளும், குருகுத்தி ஓடையை நம்பி குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா விவசாயிகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்த ஓடைகள் உரிய முறையில் தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

    இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த ஓடைகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை நன்கு தூர் வார முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் தொடங்கின.

    முதற்கட்டமாக நில அளவை செய்யபட்டு, விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடேன் ஓடை, காக்கா சோலை ஓடை மற்றும் குருகுத்தி ஓடை ஆகியவை ஆழமாக தூர்வாரப்பட்டன.

    மேலும் ஓடைப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து வேளாண் பொறியியல் துறை உதவி கோட்ட பொறியாளர் பாலன் கூறியதாவது:-

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருந்ததால், மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்து, அடிக்கடி தாழ்வான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமாகி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ஓடைகளை தூர் வார முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டு ஓடேன் ஓடையில் 2200 மீட்டர் நீளத்திற்கும், காக்கா சோலை ஓடையில் 1500 மீட்டர் நீளமும், குருகுத்தி ஓடையில் 2020 மீட்டர் நீளமும் தூர் வாரும் பணிகள் நடைபெற்றது.

    தற்போது ஓடை பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
    • குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது

    ஊட்டி,

    கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போா் வரி இனங்களை சரியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் கூறி வந்தது. வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் ராஜகோபாலபுரம் மற்றும் ஓ.வி.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகளை ஆணையா் உத்தரவின் பேரில் நகராட்சி குடிநீா் விநியோகப் பணியாளா்கள் துண்டித்தனா். 

    • காட்டுத் தீயால் பல ஏக்கா் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலானது.
    • தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால் விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

    ஊட்டி,

    கூடலூா் வனச் சரகத்தில் உள்ள நம்பாலக்கோட்டை மஞ்சமூலா இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கா் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலானது.

    கட்டுப்படுத்தமுடியாத நிலையில் பரவிய காட்டுத் தீ, மலை முழுவதையும் எரித்து சாம்பலாக்கியது. விவசாயிகள் தங்களது தோட்டத்துக்குள் தீ பரவாமல் இருக்க ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால் விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. 

    • ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
    • வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட அரவேணுவில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். விழாவில், நீலகிரி மழைசாரல் கலை குழுவின் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    ×