search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness training"

    • மாநிலம் முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு) த.ச.சஜின் தலைமையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரிவாக்க கட்டுமான பணி வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் மேற்கண்ட கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரரான பிரியா என்ஜினீயரிங் புரோஜெக்ட்ஸ் நிறுவனத்தின் 100 தொழிலாளர்களும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    • ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
    • வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட அரவேணுவில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். விழாவில், நீலகிரி மழைசாரல் கலை குழுவின் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    ×