என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
- வளா்ப்புக் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வாழைத்தோட்டம் பகுதியில் தொடங்கியது.
- 4 குழுக்களாகப் பிரிந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பக நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து முதுமலை புலிகள் காப்பகம் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள வளா்ப்புக் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வாழைத்தோட்டம் பகுதியில் தொடங்கியது. மசினகுடி கோட்டத்துக்கு உள்பட்ட மசினகுடி, மாயாறு, மாவனல்லா, சொக்கநள்ளி, ஆனைகட்டி, சிறியூா், சிங்காரா, சீகூா் வனச் சரகங்களில் கால்நடை மருத்துவக் குழுவினரும், வனத் துறையினரும் இணைந்து 4 குழுக்களாகப் பிரிந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சிவகணேசன், மருத்துவா்கள் ராஜமுரளி, பவித்ரா, நந்தினி, சதீஷ் மற்றும் வனச் சரக அலுவலா்கள் பாலாஜி, ஜான் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story






