search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி-கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
    X

    நீலகிரியில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி-கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்

    • 3-வது சுற்று இலவச கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டதில் கால்நடை பராமரிப்பு–த்துறை சார்பில் 3-வது சுற்று இலவச கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கால்நடை–களுக்கான அடையாள அட்டையும் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 28,500 கால்நடைகளுக்கு வருகிற 21-ந் தேதி வரை 26 குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து கால்நடை–களுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்த வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் 125 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் பயன் பெற்ற அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கலெக்டர் அம்ரித், கலெக்டர் அலுவலகத்தில், எஸ்.பி.டி மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் நீலகிரியில் இருந்து கோவை, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ரெயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பகவத் சிங், ஆவின் பொது மேளாலர் வெங்கடாச்சலம், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சிவக்கிருஷ்ணன், ஊட்டி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பார்த்தசாரதி, கூடலூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் நீலவண்ணன், ஆவின் துணை பொது மேளாலர் சிவசங்கர், சைலேந்திரகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் முதுமலை புலிகள் காப்பகம் அருண், எஸ்.பி.டி மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள் (ஆர்.டி.ஒ டிரஸ்ட்) நிர்வாக இயக்குநர் பெருமாள், எஸ்.பி.டி நிறுவனத்தின் செயல் அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×