என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி கல்லட்டி மலைப் பாதையில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அனுமதி
- கல்லட்டி மலைப் பாதையை உள்ளுா் மக்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த அனுமதி வழங்கி வழிவகை செய்யப்பட்டது.
- இரவு நேரங்களில் கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் உள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ளனா்.
ஊட்டி,
மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவிலுக்கு செல்லும் உள்ளுா் வாகனங்கள் கல்லட்டி மலைப் பாதையை இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீசார் சாா்பில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர உட்கோட்டம், புதுமந்து போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சாலையாக உள்ளது.
இதனால் கல்லட்டி மலைப் பாதையை உள்ளுா் மக்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த அனுமதி வழங்கி வழிவகை செய்யப்பட்டது. மேலும் மசினகுடி மற்றும் மாவணல்லா சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில நபா்கள் சொந்த இடம் வைத்திருந்தால் அவா்கள் அந்த வழியாக பயணிக்க வேண்டும் எனில் கண்டிப்பாக போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தின் ஓட்டுநா் உரிமம் கொண்டவா்கள் அனுமதி சீட்டு இல்லாமல் இந்த வழியே பயணிக்கலாம். விபத்தை தடுக்கவும், வன விலங்கு-மனித மோதலை தடுக்கவும் இரவு நேரங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உள்ளுா் வாகனங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில், மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு செல்லும் உள்ளுா் வாகன ஓட்டிகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கல்லட்டி மலைப் பாதையில் செல்ல மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீசார் சாா்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளியூா் வாகன ஓட்டிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
இரவு நேரங்களில் கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் (உள்ளுா் மற்றும் வெளியூா்) உள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ளனா்.






