என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகள் சூழ்ந்து காணப்படும் ஜக்கனாரை பஸ் நிறுத்தம்
    X

    குப்பைகள் சூழ்ந்து காணப்படும் ஜக்கனாரை பஸ் நிறுத்தம்

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஜக்கனாரை கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீப காலம் வரை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இந்நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தில் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.

    இதனால் காட்டு பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் குப்பைகளை கிளரி விடுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஜக்கனாரை கிராமத்தில் பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி குப்பைகளால் சூழ்ந்துள்ளது இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஜக்கனாரை ஊராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×