search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் நாளில்83 மனுக்கள் குவிந்தது
    X

    மக்கள் குறைதீர்க்கும் நாளில்83 மனுக்கள் குவிந்தது

    • துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 83 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில், பந்தலூர் வட்டம் புஞ்சவ யல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காகவும், கோத்தகிரி வட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு பகுதியை சேர்ந்த செல்வன், உதயகுமாருக்கு இந்திய சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவும், மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியிலி ருந்து ரூ.50 ஆயிரம் காசோலையி னையும், மாவட்ட மா ற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6,840 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சார்பில் ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் காசோலைகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தனபிரியா, மணிகண்டன், கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், மோகனகுமாரமங்கலம், ஜனார்த்தனன் (கோத்தகிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×