என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சமையல் வேலைக்காக சென்று துபாயில் சிக்கி தவிக்கும் குன்னூர் பெண்- மீட்டு தர மகள்கள் அரசுக்கு கோரிக்கை
    X

    அந்தோணியம்மாள்.

    சமையல் வேலைக்காக சென்று துபாயில் சிக்கி தவிக்கும் குன்னூர் பெண்- மீட்டு தர மகள்கள் அரசுக்கு கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலைக்கு சென்ற அந்தோணியம்மாள் தனக்கு கிடைத்த நேரத்தில் தனது தாய் மற்றும் மகள்களிடம் பேசி வந்தார்.
    • கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது மகள்கள் மற்றும் தாயாருடன் பேசியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது44).

    இவருக்கு ஆர்த்தி மற்றும் ப்ரீத்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அந்தோணியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து அந்த பகுதியில் தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

    அந்த பகுதியில் கிடைத்த சிறிய வேலைகளை செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இருப்பினும் குடும்பத்தை நடத்துவதற்கான பணம் கிடைக்காததாலும், வறுமை காரணமாகவும் அந்தோணியம்மாள் கடந்த 2019-ம் ஆண்டு ஏஜெண்டு ஒருவர் மூலமாக துபாய்க்கு சமையல் வேலைக்கு சென்றதாக தெரிகிறது.

    அவரது மகள்களான ஆர்த்தி மற்றும் பிரித்தி ஆகியோர் தங்களது பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள்.

    வேலைக்கு சென்ற அந்தோணியம்மாள் தனக்கு கிடைத்த நேரத்தில் தனது தாய் மற்றும் மகள்களிடம் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது மகள்கள் மற்றும் தாயாருடன் பேசியுள்ளார்.

    இதுதான் அவர்கள் அந்தோணியம்மாளுடன் கடைசியாக பேசியது. அதன்பின்னர் அந்தோணியம்மாள் இவர்களை தொடர்பு கொள்ளவில்லை.

    இவர்கள் முயற்சி செய்தாலும் எந்தவித பயனும் இல்லை. இதனால் தற்போது வரை அந்தோணியம்மாளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே துபாயில் சிக்கி தவிக்கும் தங்களது தாயை கண்டறிந்து மீட்டு தர தமிழக அரசும், வெளியுறவு துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோணியம்மாளின் மகள்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×