என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பழைய பை-பாஸ் சாலையில் அபிராமி தியேட்டர் எதிரே டாஸ்மாக் அரசு மதுபான கடை உள்ளது. கடையின் பின்புறம் அரசு அனுமதி பெற்ற பார் நடக்கிறது.
    • உருட்டுக்கட்டையுடன் உள்ளே புகுந்த மர்ம நபர், பார் கதவை உடைத்து எறிந்து, அங்கு இருந்த கண்ணாடி பாட்டில் களையும், ஜாடிகளையும் உடைத்து தூக்கி எறிந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் அபிராமி தியேட்டர் எதிரே டாஸ்மாக் அரசு மதுபான கடை உள்ளது. கடையின் பின்புறம் அரசு அனுமதி பெற்ற பார் நடக்கிறது.

    இதில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த சங்கர் (வயது 46) என்பவர், இந்த பாரை நடத்தி வருகிறார். நேற்று சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் சங்கர் சமையல் கூடத்தில் பாருக்கு தேவையான உணவு பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது உருட்டுக்கட் டையுடன் உள்ளே புகுந்த மர்ம நபர், பார் கதவை உடைத்து எறிந்து, அங்கு இருந்த கண்ணாடி பாட்டில் களையும், ஜாடிகளையும் உடைத்து தூக்கி எறிந்தார். பாட்டில்கள் உடைபடும் சத்தம் கேட்டு பார் உரிமை யாளர் சங்கர் வெளியே வந்தார். அப்போது சங்கரை கடுமையாக தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சங்கர் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். இப் புகார் குறித்து பரமத்திவேலூர் போலீசார் பாரை அடித்து நொறுக்கி, பாரின் உரிமை யாளரை தாக்கிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிக போக்குவரத்து நடமாட்டம் உள்ள பழைய பை-பாஸ் சாலையில் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுயிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதை போலீசார் கண்காணித்து மர்ம நபர்களின் நடமாட் டத்தை கண்டறிந்து இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்கா யம் சாகுபடி செய்யப்படுகிறது.
    • உற்பத்தி குறைவு காரணமாக சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்கா யம் சாகுபடி செய்யப்படு கிறது. உற்பத்தி குறைவு காரணமாக சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தக்கா ளிக்கு நிகராக சின்ன வெங் காயத்தின் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்ற ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது ரூ.70 வரை விற்கப்படுகிறது.

    உற்பத்தி குறைவாக உள்ளதால், இருப்பில் உள்ள சின்ன வெங்காயமே தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, இதன் விலை வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நாமக்கல்லில்லி நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்ய ப்பட்டது குறிப்பிடத் தக்கது. சின்ன வெங்காயம், தக்காளி என சமையலுக்குத் தேவையான முக்கியப் பொருட்களின் விலை அதி கரித்துள்ளதால் பொது மக்கள் சிரமத்திற்குள்ளா கியுள்ளனர்.

    • பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகா மில் தனி வருவாய் ஆய்வா ளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இவற்றில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படு கின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படு கின்றன.

    முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) விலை நிர்ணயம் செய்கிறது. கடந்த ஜூன் 30-ம் தேதி முட்டை யின் பண்ணைக் கொள்மு தல் விலை 550 பைசாவாக இருந்தது. கடந்த 1-ம் தேதி 540, 2-ம் தேதி 530, கடந்த 5-ம் தேதி 470 பைசாவாக விலை நிர்ண யிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று நடை பெற்ற என்இசிசி கூட்டத் தில் , மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு முட்டை யின் பண்ணைக் கொள்முதல் விலை 450 பைசாவாக நிர்ணயிக்கப் பட்டது.

    உற்பத்தி மிகுதி மற்றும் நுகர்வு குறைவால் முட்டை விலை சரிந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்தனர்.

    நாட்டின் பிற நகரங்களில் முட்டை விலை விவரம் (பைசாக்களில்):-

    சென்னை-530, பர்வாலா-392, பெங்களுரு-480, டெல்லி-410, ஹைதரா பாத்-450, மும்பை-530, மைசூரு-570, விஜய வாடா-450, ஹொஸ்பேட்-440, கொல்கத்தா-490.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.108 எனவும், முட்டைக்கோழி ரூ.82 எனவும் விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது.

    • பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், செல்லப்பம்பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், பாகம் பாளையம், அய்யம்பாளை யம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், தி.கவுண் டம்பாளையம், நல்லிக்கோ வில், ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, சோழ சிராமணி, பெரிய சோளிபா ளையம், சின்ன சோளிபா ளையம், இருக்கூர், கோப் பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பல விவசாயிகள் பதிவு செய் துள்ளனர்.

    பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அதை அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந் திரா, கேரளா, கர்நா டகா, மகாராஷ்டிரா, உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல் லம் ஒரு சிப்பம் ரூ1,180-க் கும், அச்சுவெல்லம் ரூ.1,070-க்கும் விற்பனையா னது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20க்கும் விற்பனையானது.

    கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது.
    • இந்த ஏ.டி.எம்.மிற்கு கடந்த 29-ந் தேதி பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், பணம் வராததால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்று விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது. இந்த ஏ.டி.எம்.மிற்கு கடந்த 29-ந் தேதி பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், பணம் வராததால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்று விட்டார்.

    ஆனால் அதன் பின்னர் பணம் வந்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு பின்னால் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிப்பாளை யத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் அரசு, அவரது நண்பர் நவீன் (22) ஆகியோர் ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றனர்.

    அப்போது, அந்த ஏ.டி.எம்-ல் ரூ.20 ஆயிரம் பணம் இருப்பதை பார்த்து, அதை வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் இந்திராணியிடம் ஒப்படைத்தனர். இதை யடுத்து ஏ.டி.எம்-ல் பணத்தை விட்டுச் சென்ற வர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில், வங்கியில் பணத்தை தவற விட்டது பரமத்திவேலூர் பள்ளி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலா ளராக பணிபுரிந்து வரும், அனிச்சம்பாளை யத்தை சேர்ந்த கருப்பண்ணன்(65) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து, அவர் ஏ.டி.எம்-ல் தவற விட்ட ரூ.20 ஆயிரத்தை வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி கருப்பண்ணனிடம் நேற்று ஒப்படைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்த மாணவர் அரசு மற்றும் நவீன் ஆகியோ ருக்கும் இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    • கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பவர்டில்லர், களை எடுக்கும் கருவிகள் மானிய விலையில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.
    • இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக, 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட, கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பவர்டில்லர், களை எடுக்கும் கருவிகள் மானிய விலையில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட 65 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

    விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலி மூலமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் இத்திட்டம் தொடர்பான முழுவிவ ரங்களைப் பெற, நாமக்கல் வேளாண்மைப் பொறி யியல் துறை வேளாண்மை விரிவாக்க மைய உதவி செயற்பொறியாளர், திருச்செங்கோடு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறி யாளர் ஆகியோரை அணு கலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    • பா.ஜக அரசை கண்டித்து திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது.
    • நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    திருச்செங்கோடு:

    ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய காரணமாக இருந்த பா.ஜக அரசை கண்டித்து திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது.

    நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், கிருஷ்ணன், அல்லி முத்து, மாவட்ட துணை தலைவர்கள் காசி விசுவநாதன், தங்கராஜ், மல்லை கிருஷ்ணன், வட்டார தலைவர்கள் சுரேஷ் கார்த்தி, ரவிச்சந்திரன், பழனிச்சாமி, நகரத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ராஜேந்திரன், ராஜா, மாவட்ட பொது செயலாளர் சிவாஜி, ஆறுமுகம் சிவாஜி, சேகர், நடராஜ், பிரபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.
    • மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.

    மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், திருச்செங்கோடு நகரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூ றாக வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்து, போக்குவ ரத்திற்கு உதவு மாறு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

    • வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
    • மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். இந்த வாகன சோதனையில் தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 கனரக வாகனங்கள், ஒரு டிராக்டர், சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக இயக்கிய ஒரு ஆம்னி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    அந்த வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரி வசூலிக்கவும், ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கும் பொருட்டு தணிக்கை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் போடாமல் சென்ற மணல் லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கியும், தார்பாய் போர்த்திய பிறகு லாரியை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இந்த வாகன சோதனை தொடர்ந்து பரமத்திவேலூர் வட்டார பகுதியில் நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.
    • அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.

    கூர்மையான கற்கள்

    அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள், அந்த நபரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காயங்களுக்கு மருந்து போட்டு, அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர்.

    சாக்கடையில் குதித்தார்

    இதனிடையே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அந்த நபர், அரசு மருத்துவமனை அருகே உள்ள சாக்கடையில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

    இதனால அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்று விட்டார். இரவு சுமார் 9 மணியளவில் பரமத்திவேலூர் பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார்.

    கொதிக்கும் எண்ணெய்

    அங்கு சில்லி சிக்கன் போடுவதற்காக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை திடீரென எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரித்து ஓடினார்கள்.

    கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மனநலம் பாதிப்பு

    இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர், திருச்செங்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன் (வயது 55) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறது. அவர் குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடையின் வெளிப்பகுதியில் இதுபோன்று அடுப்பு வைத்து சமையல் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இ.பி. காலனி யைச் சேர்ந்தவர் செல்ல துரை (வயது 50). இவர் அங்குள்ள பொய்யேரி கரையில் டீக்கடை நடத்தி வருகிறார்.
    • உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் இ.பி. காலனி யைச் சேர்ந்தவர் செல்ல துரை (வயது 50). இவர் அங்குள்ள பொய்யேரி கரையில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு சென்ற 3 பேர் சென்னை குற்றப் பிரிவு போலீசில் இருந்து வந்துள்ளோம். 3 ஆண்டுக்கு முன் அரசால் தடை செய் யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக உங்கள் மீது வழக்கு உள்ளது.

    உங்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்தால் குண்டர் சட்டம் பாயும். உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.

    மேலும் செல்லத்துரை வைத்திருந்த மொபைல் போனை பறித்து ரூ.3.25 லட்சம் வங்கியில் இருப் பதை தெரிந்து கொண்ட னர். தொடர்ந்து 3 காசோலை எடுத்துக் கொண்டு பரமத்தி சாலை யில் உள்ள தனியார் வங் கிக்கு அழைத்து சென்றனர்.

    காசோலையை பயன் படுத்தி, செல்லதுரையை ரூ.3 லட்சம் எடுக்க வைத்து பறித்துக் கொண்டனர். ஒரு காசோலையில் ரூ.10 ஆயி ரம் எழுதி மிரட்டி கையெ ழுத்து போட்டு வாங்கி சென்றனர். இதுகுறித்து செல்லத்துரை யாரிடமும் புகார் கொடுக்கவில்லை.

    இதனிடையே சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு வந்த செல்லதுரை மகள், தந்தை மொபைல் போனை பார்த்து வங்கியில் இருந்து ரூ. 3 லட்சம் எடுத்தது குறித்து கேட்டார். அப்போது 3 பேர் வந்து மிரட்டி பணத்தை பறித்து சென்றதை தெரிவித்தார்.

    அதிர்ச்சி அடைந்த செல்லதுரை மகள் வங்கியை தொடர்பு கொண்டு காசோலை யாரா வது கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட வங்கியின் காசோலை பயன்படுத்தி பணம் எடுக்க மர்ம நபர் வந்ததால் செல்லதுரைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் போலீசில் அவர் புகார் தெரிவித்தார்.

    வங்கிக்கு சென்ற போலீசார், பணம் எடுக்க வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருச்செங்கோடு அடுத்த இலுப்புலியை சேர்ந்த மாதேஸ்வரன் (35) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவல்படி திருச்செங்கோட்டை சேர்ந்த சபரிநாதன் (35), சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த இலியாஸ் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சபரிநாதன் மீது கொலை வழக்கு, 3 கொள்ளை வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளன. இலியாஸ் மீது 2 கொலை வழக்கு, கொள்ளை வழக்குகள் நிறுவையில் உள்ளது. 3 பேரையும் கைது செய்து ரூ.1.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரித்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இதேபோல சபரிநாதன் உட்பட 3 பேரும் பல இடங்களில் கைவரிசை காட்டியதும், தற்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

    அது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்பதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×