பரமத்தி வேலூர் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு

வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். இந்த வாகன சோதனையில் தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 கனரக வாகனங்கள், ஒரு டிராக்டர், சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக இயக்கிய ஒரு ஆம்னி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரி வசூலிக்கவும், ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கும் பொருட்டு தணிக்கை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் போடாமல் சென்ற மணல் லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கியும், தார்பாய் போர்த்திய பிறகு லாரியை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இந்த வாகன சோதனை தொடர்ந்து பரமத்திவேலூர் வட்டார பகுதியில் நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com