என் மலர்
நாமக்கல்
- பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகன் பெரியசாமி (வயது 37). கட்டிட மேஸ்திரி. இருவருக்கு பிரேமா என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பிரேமாவுக்கு திடீரென காதில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மோகனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பெரியசாமி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த பெரியசாமி மனைவி கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி பிரேமா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2011-ல் இணை மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
- 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது
பரமத்தி வேலூர்
மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டத்தை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை துறை சார்பில் கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2011-ல் இணை மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேஷ் குமார் எம்.பி. முயற்சியை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து இணை மின் திட்ட பணிகளை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமை பெற்று செயல்பாட்டிற்கு வந்தால் சர்க்கரை ஆலைக்கு 3 மெகாவாட் யூனிட் மின்சாரம் பயன்பாட்டிற்கும் மீதமுள்ள 12 மெகா வாட் மின்சாரம் விற்பனை செய்யப்படும்.
இதனால் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
- மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலை வாய்ப்பு
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளா கத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பொருத்த மான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு
முகாமில் பங்கேற்று பணியா ளர்களை தேர்வு செய்ய விரும்பு கிற தனியார் நிறுவனங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை வருகிற 1-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).
மாட்டு வியாபாரி
மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபா ளையம் போலீசார் வரத ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சாவு
இதேபோல் ஜேடர்பா ளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல் - பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வழக்கு
சுரேந்திரன் பலத்த காய மடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது.
- இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஆமணக்கு சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை உதவி இயக்குநர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாகவும் இயல்பாகவும் வாழ்வதை உறுதி செய்வது குறித்தும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவா குமாரி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளிக்கப்படும். தகுதியான விவசாயிகள், ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங் களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
5 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிபணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2-ம் நிலைக் காவலர் 1,819 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் -83, பெண்கள் -3 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர்- 674 காலி பணியிடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் வீரர்கள்
இப்பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீ ரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1.7.2023 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 1.7.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக “பால சக்தி புரஷ்கார்” என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
புதிய கண்டுபிடிப்பு
மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் "பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனிதகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக "பால சக்தி புரஷ்கார்" என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகி யவற்றை கொண்டதாகும்.
குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவை களில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக "பால கல்யாண் புரஷ்கார்" என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
விண்ணப்பம்
இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப் பித்தல் வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணை யதளம் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் 31.08.2023 ஆகும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு தமிழகம்மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காட்சி முனையம், அறப்பரளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள மாசிலா அருவி பசுமை சுற்றுச் சூழல் திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை மூலம் நடைபாதை, பொழுது போக்கு பூங்கா, உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்சமயம் சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ள மாசிலா அருவிக்கு சென்று குளிப்பது, செல்பி மற்றும் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பாறைகளில் வழுக்கி தவறி விழுந்து அடிப்படுவது போன்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார்.
அவர் தடைசெய்யப்பட்ட மாசிலா அருவியின் மேல் பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று குளித்துள்ளார். அப்போது குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக தனது ஊரில் உள்ள நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி அங்குள்ள 70 அடி பள்ளத்தில் விழுந்து குணால் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணம். இவரது மகன்கள் நவீன்காந்த் (23), நிதிஷ்காந்த் (21). இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது அங்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் 500 படிக்கட்டுகளை கடந்து சென்றபோது, நிதிஷ்காந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்காந்த், இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடம் வந்து நிதிஷ்காந்தை மீட்டு சேம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).
மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் வரதராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜேடர்பாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல்-பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேந்திரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் அருேக உள்ள வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






