என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
    X

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

    • வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலை வாய்ப்பு

    நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளா கத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பொருத்த மான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

    பதிவு

    முகாமில் பங்கேற்று பணியா ளர்களை தேர்வு செய்ய விரும்பு கிற தனியார் நிறுவனங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை வருகிற 1-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×