பரமத்தி வட்டாரத்தில் ஆமணக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம்

தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது.இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
பரமத்தி வட்டாரத்தில் ஆமணக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஆமணக்கு சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை உதவி இயக்குநர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com