என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkaldistrict: மீதமுள்ள 12 மெகா வாட் மின்சாரம் விற்பனை செய்யப்படும் The remaining 12 MW of electricity will be sold."

    • கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2011-ல் இணை மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
    • 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது

    பரமத்தி வேலூர்

    மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டத்தை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை துறை சார்பில் கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2011-ல் இணை மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேஷ் குமார் எம்.பி. முயற்சியை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து இணை மின் திட்ட பணிகளை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமை பெற்று செயல்பாட்டிற்கு வந்தால் சர்க்கரை ஆலைக்கு 3 மெகாவாட் யூனிட் மின்சாரம் பயன்பாட்டிற்கும் மீதமுள்ள 12 மெகா வாட் மின்சாரம் விற்பனை செய்யப்படும்.

    இதனால் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×