என் மலர்
நாமக்கல்
- கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
- 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-
6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
- கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைக்கு மழைநீர் வர தொடங்கியுள்ளது. வறண்ட நிலையில் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி? கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி? கியாஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்தும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர். அனைவருக்கும் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்று விழா, பொங்கல் வைத்தல் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. மேலும் நாள்தோறும் ஒவ்வொரு கட்டளை தாரர்கள் சார்பில் வாணவேடிக்கை மேளதாளத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும் வேப்பிலையை கையில் ஏந்தியும் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் சில பக்தர்கள் கைக்குழந்தையுடனும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தீ மிதித்தனர்.
தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக கோவிலில் இருந்து பழைய கோர்ட்டு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலையில் அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் சாமி நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கை, நையாண்டி மேள தாளத்துடன் சப்தா பரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12-ந் தேதி வசந்த உற்சவம், 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடையாற்றி கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள் கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
- தேவைப்படும் விவசாயிகள் ஆதார், சிட்டா நகல் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள் கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் ஆதார், சிட்டா நகல் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் 2.50 ஏக்கர் வேம்பு கன்று நடவு செய்ய ரூ.17,500 அரசு மானியம் வழங்கப்படுகிறது. நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
- மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 39). இவர் மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி சக்தியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11.30 மணி அளவில் பாலசுப்பிரமணி மற்றும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்திவேல், மற்றொரு விற்பனையாளர் ராமசாமி ஆகியோர் தனித்த னியாக ேமாட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.
இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே புலவர்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது.
- தொடர்ந்து சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 31 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே புலவர்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக பரமத்தி போலீசாருக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது புலவர் பாளையத்தை சேர்ந்த லிங்கம் (வயது 48), நாமக்கல் அருகே முதலைப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் சக்கரவர்த்தி (40) ஆகிய இருவரும் சேர்ந்து புலவர்பாளையத்தில் சூதாட்ட கிளப் நீண்ட காலமாக நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 29 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 21 ஆயிரம் மற்றும் 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 31 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.97½ குவிண்டால் எடை கொண்ட 16 ஆயிரத்து 255 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.
அதேபோல் 363.49½ குவிண்டால் எடை கொண்ட 765 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.85.89-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.68-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 95ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.
- எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம், எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவருக்கு சுமார் 40 முதல் 50 வயது வரை இருக்கும். பச்சை நிற கை வைத்த பனியனும், நீல நிற வெள்ளை கோடு கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
- தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் பிடில்முத்து தெரு வை சேர்ந்தர் பாதுஷா. இவரது மகன் சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
பரிதாபமாக இறந்தார்
இந்த நிலையில் நேற்று சாகில் அலங்காநத்தம் சென்று விட்டு தனியார் பஸ்சில் நாமக்கல் நோக்கி வந்தார். தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
இதில் பலத்தகாயம் அடைந்த சாகில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் மீது வழக்கு
இது குறித்து அவரது தந்தை பாதுஷா நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனியார் பஸ் டிரைவர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இளைஞர் பஸ்சில் இருந்து வெளியே விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
- வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவரது மகள் மோகனா.
மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
திருட முயற்சி
இந்த நிலையில் மோகனாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் செல்வராஜ் தனது காரில் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு மீண்டும் வேலகவுண்டம்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் திருடர்கள் திருடர்கள் என சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தார். அப்போது அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்ற 3 பேரையும் பொதுமக்கள் பிடித்து வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.
போலீசார் 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை புதிய பெருங்களத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர் (25), திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பாரதி நகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் மகன் யாழின் (23), அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் அஸ்வின் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் திருவள்ளுவர் நகரில் மோகனா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
ஜெயிலில் அடைப்பு
அதனையடுத்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர், யாழின், அஸ்வின் ஆகிேயாரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.






