என் மலர்
நாமக்கல்
- குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை பேளுக் குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி தேவேந்திர தெரு மேற்கு வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 61). இவரது மனைவி சின்ன பொண்ணு (வயது 88). இவர்களுக்கு சின்ராசு கோபால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
மாரியப்பனும், சின்ன பொண்ணுவும் கூலி வேலை செய்து வந்தனர். மாரியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவு குடித்துவிட்டு வந்த மாரியப்பன் மனைவியிடம் தகராறு செய்தார்.
பின்பு இருவரும் தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை திடீரென்று எழுந்த மாரியப்பன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டார்.
இதில் சின்னப்பொண்ணு தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மாரியப்பன் பேளூக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலை பற்றிய விவரத்தை கூறி சரண் அடைந்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சின்ன பொண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
சேந்தமங்கலம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை பேளுக் குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடையில் கள்ளத்தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
- மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்கள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் காரணமாக, மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாத பார்கள், சந்துக் கடைகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருந்தும், ஆங்காங்கே ஒரு சில சந்துக் கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மோகனூர் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும், தி.மு.க கிளை செயலாளர் குமரவேல் (42) என்பவர், தனது கடையில் கள்ளத்தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மளிகை கடையில் இருந்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 500 நகர்ப்பற நல வாழ்வு மையங்களை, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.
- பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும்.
நாமக்கல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மருத்துவத் துறையின் மூலம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 500 நகர்ப்பற நல வாழ்வு மையங்களை, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.
இந்த நல வாழ்வு மையங்களில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு ஆய்வாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியமர்த்தப்பட்டு, பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொசவம்பட்டி, போதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, தெற்கு நகர தி.மு.க செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கமிஷனர் ஆணையாளர் சென்ன கிருஷ்ணன், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- ஏ.டி.எம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார்.
- பின்னர், வெல்டிங் எந்தி ரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, மெட்ட லாவில் தனியார் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு அந்த மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார். பின்னர், வெல்டிங் எந்திரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு அருகே இருந்த கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் அங்கு வந்துள்ளனர். அதைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்ப வம் தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மையத்திற்குள் சென்று திருட முயற்சித்துள்ளார். மற்றொருவர் வெளியே நின்று பொதுமக்களின் நடமாட்டத்தை கண்கா ணித்து வந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவ ரங்கள் தெரியவந்துள்ளது.
எனினும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆயில்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பல்வேறு தடயங்க ளைக் கொண்டு, ஏ.டி.எம் மையத்தை கொள்ளை யடிக்க முயற்சித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
- குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
குமாரபாளையம்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி, குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
இதையொட்டி குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், எலந்த குட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் நகர்நல மைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், இனியா ராஜ், கனகலட்சுமி, கோவிந்தராஜன், விஜயா,திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வராஜ், சரவணன்,சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
- இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.
- இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்து வதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசபடுவதை தவிர்த்து, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், நெல், கரும்பு, மக்காச்சோ ளம், பருத்தி, தென்னை, வாழை, மரவள்ளி, வெங்கா யம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, இயற்கை விவசா யத்தை ஊக்குவித்து வருகிறது.
விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்க ளுக்கு, அதிக அளவில் இயற்கை உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் (டிரைக்கோ விரிடி, சூடோ மோனாஸ், மெட்டாரை சியம், பிவேரியா, டிரைக்கோகிரம்மா, கிரை சோபெர்லா) ஆகியவை, வேளாண் துறையின், அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்து வதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசபடுவதை தவிர்த்து, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம். மேலும், நஞ்சில்லா உணவையும் மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியும்.
அதனால், விவசாயிகள் வேளாண் துறை மூலம் தங்கள் வயல்களில் மண்பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்படும், அளவிற்கு மிகாமல் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.
உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் வாங்கும்போது, லைசென்ஸ் பெற்ற உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களிடம், உரிய விற்பனை ரசீது பெற்று வாங்க வேண்டும்.
போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பல்லடத்தில் நடந்தது. இதில் கறி கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 6 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 129 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை கிலோ 135 ஆக உயர்ந்தது.
இதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 97 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 94 ரூபாயாக சரிந்தது.
நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் முட்டைகளின் தேவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
- சுப்பிரமணி (வயது 70) இவர் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
- இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70).
ஓய்வு பெற்ற மின் ஊழியர்
இவர் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ருக்மணி, கடந்து 7 வருடங்க ளுக்கு முன்பு இறந்து விட்டதால், சுப்பிர மணி தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் பணியை கவனித்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நாமகிப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையை தொடங்கினர். இதில், புதுப்பட்டி ஆதிதிரா விடர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பெயிண்டர் அருண்குமார் (20) என்ப வரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், சுப்ர மணி யத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள் ளார். அதில், கொலை செய்யப்பட்ட சுப்பிரமணி யன் வீடு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் அங்கு செல்லும் மது பிரி யர்கள் மது பாட்டில்களை வாங்கி சுப்பிரமணியன் வீட்டுக்கு அருகே அமர்ந்து மது குடிப்பது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பணம் திருட்டு
அதன்படி அருண்குமா ரும் மது வாங்கி சுப்பிர மணியன் வீட்டின் முன் அமர்ந்து குடித்து வந்தார். அப்போது போதையில் அருண்குமார், சுப்பிரமணி யின் வீட்டுக்கு சென்று அவ ரது சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார். நேற்று முன் தினமும் வழக்கம்போல் அருண்குமார் சுப்பிரமணி யன் வீட்டின் அருகே மது குடித்தார். பின்னர் போதையில் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றார்.
கட்டையால் அடித்து...
சுப்பிரமணி சட்டை பையில் இருந்த பணத்தைத் திருட முயன்றார். அப்போது சுப்பிரமணி கண்விழித்து பார்த்தபோது, அருண்கு மார் பணத்தை திருட முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த அருண்குமார் அங்கு இருந்த கட்டையால் சுப்பிரமணியத்தை அடித்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தி தன்னை கைது செய்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள் ளார். இதனை தொடர்ந்து போலீசார் அருண்குமாரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலி அறிமுகப்ப டுத்தப்பட்டு உள்ளது.
- உழவன் செயலியை ஆன்ட்ராய்டு மொபைல் போனில், பிளே ஸ்டோர் வழியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் துரைசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறி யியல் துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை, விவ சாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலி அறிமுகப்ப டுத்தப்பட்டு உள்ளது.
உழவன் செயலியை ஆன்ட்ராய்டு மொபைல் போனில், பிளே ஸ்டோர் வழியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன் லோடு செய்தபின் செயலியில், தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் விபரங்களை பதிவு செய்து, உழவன் செயலியை பயன்படுத்தலாம்.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மற்றும் மான்ய திட்டங்கள், வேளாண் வளர்ச்சித் திட்டம், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரங்கள் மற்றும் விதை இருப்பு நிலை, சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், பயிர் சாகுபடி வழிகாட்டி உள்பட, 23 வகையான பயன்பாடுகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த செல்போன் செயலியை விவசாயிகள் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை, எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்குகிறது.
- இந்த ரெயில், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
நாமக்கல்:
சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை, எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்குகிறது. இந்த ரெயில், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்க ளில் மட்டும் நின்று செல்கி றது. நாமக்கல்லில் நிற்ப தில்லை. கடந்த 5 ஆண்டு களாக, இதே நிலைதான் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 15-ந் தேதி முதல், சென்னை சென்ட்ரல்–, மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை, தேனி மாவட்டம் போடி வரையில் நீட்டிக்க, தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
மாவட்டத்தின் தலைநக ரான நாமக்கல்லில், சென்னை–-போடி ரெயில் நின்று செல்வதற்கான நடவ டிக்கைகளை மத்திய இணை மந்திரி முருகன் மற்றும் எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் ஆகியோர் மேற்கொள்ள வேண்டும் என ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். சென்னை– - போடி ரெயில், வாரம் தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:35 மணிக்கு போடி சென்றடைகிறது. நாமக்கல்லை, காலை 4 மணிக்கு கடந்து செல்கிறது.
மறு மார்க்கமாக ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியா ழக்கிழமைகளில், இரவு 8:30 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நாமக் கல்லை நள்ளிரவு, 1:30 மணியளவில் கடந்து செல்கிறது.
இந்தியா முழுவதும் இருந்து, தொழில், கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு விஷயங்களுக் கான, ஏராளமானோர் நாமக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் போதிய ரெயில் வசதி இல்லாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளா கின்றனர்.
சென்னை சென்ட்ரல் - –போடி எக்ஸ்பிரஸ் ரெயில், நாமக்கல்லில் நின்று சென்றால், பயணிகள் அனைவருக்கும் பயனுள்ள தாக அமையும். அதனால், சென்னை சென்ட்ரல் - –போடி விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதல் பட்டதாரி சான்று கேட்டு 209 பேர், வருமானச் சான்று கேட்டு 85 பேர், இருப்பிடச் சான்று கேட்டு 220 பேர், ஜாதி சான்று கேட்டு 4 பேர், என மொத்தம் 518 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
- இந்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து, சான்று பெற சிறப்பு முகாம் நடக்கி றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்க ளில் நடைபெற்ற பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, முதல் பட்டதாரி சான்று கேட்டு 209 பேர், வருமானச் சான்று கேட்டு 85 பேர், இருப்பிடச் சான்று கேட்டு 220 பேர், ஜாதி சான்று கேட்டு 4 பேர், என மொத்தம் 518 மாணவ மாண விகள் விண்ணப்பித்துள்ள னர். இந்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து, சான்று பெற சிறப்பு முகாம் நடக்கி றது. மேற்கண்ட சான்று கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், மையத்தின் தலைமை ஆசிரி யரிடம் தேவையான ஆவ ணங்களை, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணிக்கு ஒப்படைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சான்றுகள் பதிவேற்றம் செய்யும் பள்ளிகளின் விபரம்:- நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துகாப்பட்டி, கோனூர் மற்றும் ஆர்.பட்டணம் அரசு மேல்நி லைப்பள்ளி, நாமகி ரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலவாய்ப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேவனாங்குறிச்சி மற்றும் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
இந்த பள்ளிகளில் செயல்படும் சிறப்பு மையங்கள் மூலம் ஆன்லை னில் வெப்சைட்டில் விண்ணப்பித்தவுடன், மாணவ மாணவிகளுக்கு மேற்கண்ட சான்றுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன.
- சில சாயப்பட்டறைகள் சுத்தி கரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இவைகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் உள்ளன.
அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சில சாயப்பட்டறைகள் சுத்தி கரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன் இடித்து வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர்.
ஆனாலும் இப்படிப்பட்ட சாயப்பட்டறைகளில் மாற்று வழியில் உள்ளே நுழைந்து, ஜெனரேட்டர் மூலம் சாயம் போடும் பணியை இரவில் செய்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காவேரி நகர் பகுதியில் காவிரி ஆற்றில் அப்பகுதி சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், காவிரி ஆற்றில் கலக்கப்பட்டது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், தின மும் இதுபோல் மாலை மற்றும் இரவில் சாயப்பட்டறையினர் கழிவுநீரை வெளியேற்று கின்றனர். இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த துர்நாற்றம் தாங்க முடியாத நிலையில் உள்ள னர். நகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்படும் இடம் அருகே இந்த சாயக்கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் பொது மக்களுக்கு பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதால், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து உடனே நடவ டிக்கை எடுத்து, பொது மக்கள் உயிர்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் எனவும் சாயப்பட்டறை உரி மையாளர் மீது தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






