என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயக்கழிவு நீர் கலப்பு"

    • குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன.
    • சில சாயப்பட்டறைகள் சுத்தி கரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இவைகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் உள்ளன.

    அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சில சாயப்பட்டறைகள் சுத்தி கரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன் இடித்து வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர்.

    ஆனாலும் இப்படிப்பட்ட சாயப்பட்டறைகளில் மாற்று வழியில் உள்ளே நுழைந்து, ஜெனரேட்டர் மூலம் சாயம் போடும் பணியை இரவில் செய்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காவேரி நகர் பகுதியில் காவிரி ஆற்றில் அப்பகுதி சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், காவிரி ஆற்றில் கலக்கப்பட்டது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், தின மும் இதுபோல் மாலை மற்றும் இரவில் சாயப்பட்டறையினர் கழிவுநீரை வெளியேற்று கின்றனர். இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த துர்நாற்றம் தாங்க முடியாத நிலையில் உள்ள னர். நகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்படும் இடம் அருகே இந்த சாயக்கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் பொது மக்களுக்கு பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதால், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து உடனே நடவ டிக்கை எடுத்து, பொது மக்கள் உயிர்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் எனவும் சாயப்பட்டறை உரி மையாளர் மீது தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×