என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீர்காழி காவல்துறை சார்பில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீர்காழி காவல்துறை சார்பில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு யுவபிரியா விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் எமன் வேடமிட்ட ஒருவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவரை எச்சரித்து அனுப்பும் சம்பவம் அனைவரையும் கவர செய்தது. நிகழ்ச்சியில் காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர் அருகே காய்கறி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் (வயது48). இவர் இலுப்பூர் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். காய்கறி கடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வடக்காலத்தூர் நூலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். அப்போது பாண்டியன் தான் விஷத்தை குடித்துவிட்டதாக தெரிவித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாண்டியன் இறந்தார். இதுகுறித்து பாண்டியனின் மனைவி மேரி கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ராஜா கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா கலந்து கொண்டு பேசினார். இதில், மாநில துணை செயலாளர் சாக்ரடீஸ், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்பப்பெற வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக, கணவர், உறவினர்கள் தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர்-மூங்கில்குடி சாலை வடக்குவெளி பகுதியில் டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையில் சங்கர் (வயது48) மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கீழ்வேளூர் நேருநகரை சேர்ந்த விக்னேஷ் (25), அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் (31) ஆகியோர் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு விற்பனையாளர் லட்சுமணனிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கர் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், எழிலரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் கீழத்தெருவை சேர்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி மனைவி சரண்யா (வயது 27). இவர் குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் கதவு திறந்திருந்த கொள்ளைபுறம் வழியாக மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த சரண்யாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதில் அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை துரத்தி சென்றனர். ஆனால் மர்மநபரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரோனாவில் முடங்கிய கருவாடு தயாரிக்கும் பணி நாகையில் தொடங்கியது. மழைகாலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கருவாடு திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு 500 கிலோ முதல் 1 டன் வரையிலான அளவிற்கு கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும்.
இதுதவிர கோழித்தீவனத்துக்காக பாறை, சிறிய வகை சங்கரா, வாவல்பொடி, நண்டுப்பொடிகள் உள்ளிட்ட வலையில் சிக்கி, சேதமடைந்த மீன்களிலும் கருவாடு தயாரிக்கப்படுகிறது. ஒரு மூட்டை கோழித்தீவன கருவாடு ரூ.25-ல் இருந்து ரூ.40 வரை வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 1000 மூட்டை கோழி தீவனத்துக்கான கருவாடுகள் இங்கு தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் முற்றிலும் முடங்கிப்போன கருவாடு தயாரிக்கும் தொழிலானது, தற்போது மீண்டும் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கருவாடு உற்பத்தியில் கேரள மாநிலம் தலச்சேரிக்கு அடுத்த நிலையில் இருப்பது நாகை மாவட்டம். இங்கு தயார் செய்யப்படும் கருவாடுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அடைமழை காலங்களில், அன்றாட உணவு தேவையில் முக்கியத்துவம் பெற்றிருந்த மாவத்தல், கொத்தவரை வத்தல், சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் வத்தல் மற்றும் வடகம் வரிசையில் அசைவப்பிரியர்களின் முக்கிய உணவாக கருவாடு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தபோது, இந்த கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், தற்போது வெளுத்து வாங்கும் வெயிலில் சிறப்பாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மழைகாலங்களில் கருவாடு உற்பத்தி முற்றிலும் பாதிக்கும். அப்போது சேமித்து வைத்த கருவாடுகள் விற்பனை செய்யப்படும். அந்த நாட்களில் கருவாட்டின் விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். மேலும் புயல் காலங்கள் என்றால், கொட்டகைகள் இடிந்து, அதில் உள்ள கருவாடுகள் அனைத்தும் வீணாகும். எனவே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை காலங்களில் சேதமடையும் கருவாட்டிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் கணவன்-மனைவியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செம்போடை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் விவசாயி அஞ்சப்பன் (63) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி ராஜசெல்வி (45) ஆகியோர் தங்களின் மாந்தோப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அஞ்சப்பன் மற்றும் அவருடைய மகன் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தையும், அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், கம்பாலும், கம்பியாலும் தாக்கினர்.
இதில் காயம் அடைந்த ஆறுமுகம், அவருடைய மனைவி ராஜசெல்வி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சப்பனை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறைவான வெங்கடேசனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாம்பு கடித்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி ஊராட்சி திருமாளம்பொய்கை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் ஹரிஷ் (வயது8). சம்பவத்தன்று சிறுவன் பட்டாசு வெடிப்பதற்கு வீட்டில் இருந்த ஊதுபத்தியை எடுக்க பூஜை அறைக்கு சென்றுள்ளான். அப்போது ஹரிசை பாம்பு கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் இறந்தான். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல்படியும், தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நாகை அருகே நாகூர் கால் மாட்டு தெரு, யானை கட்டிமுடுக்குசந்து ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 33), நாகூரை அடுத்த தெத்தி சமரசம் நகரை சேர்ந்த அப்பாஸ் (44) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.74 ஆயிரத்து 900-ம், 10 லாட்டரி சீட்டுக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக யூசுப் மற்றும் அப்பாஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
காரைக்கால் ஓடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
மயிலாடுதுறை குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டிற்கு குத்தாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காரைக்கால் ஓடுதுறை அருகே சாலையில் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சிலம்பரசன் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணுக்கு நாற்காலி தேவையா? ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாக பிரியா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை:
மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
23 வயது பிரியா பெரியசாமி பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணுக்கு நாற்காலி தேவையா? ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாக பிரியா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊராட்சிக்கான நிதியை பெற கையெழுத்திட துணை தலைவர் மறுப்பதாகவும் குற்றம் சட்டியுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். இதில் மாநில பொருளாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.
தொழிலாளர் விரோத போக்கை ஏற்படுத்தி வரும் நாகை வருவாய் கோட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் வருகிற 21-ந் தேதி நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75 மருத்துவ, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ. 2 லட்சம் உடனே வழங்கிட வேண்டும். சங்கத்தின் அனைத்து வட்ட பேரவைகளை அக்டோபர் மாதத்திற்குள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜூ, நடராஜன், ராணி, ஜம்ருத்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.