என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் விழுந்தமாவடி கிராமம் தம்பிரான் குடியிருப்பை கார்த்திக் (வயது 27) என்பதும், பையில் மறைத்து வைத்து சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடமிருந்து 1. 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு (2020) விழா நடைபெறவில்லை..

    இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி வேளாங்கண்ணி பேராலய பெருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
    தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 4 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டான். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சிறுவனின் தாய், கள்ளக்காதலனுடன் கைதானார்.
    வெளிப்பாளையம்

    நாகையில், நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31). இவர், கார் மற்றும் வாகனங்களுக்கு ‘டிங்கரிங்’ வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த அபர்ணா(22) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததன்பேரில் தாமரைகுளம் தென்கரை பகுதியில் மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தினர். இந்த தம்பதிக்கு 4 வயதில் கவிதிரன் என்ற மகன் இருந்தான்.

    கார்த்திக் அரவிந்த், சென்னையில் தங்கி இருந்து ‘டிங்கரிங்’ வேலை பார்த்து வருகிறார். அபர்ணா தனது குழந்தையுடன் தாமரைகுளம் தென்கரை பகுதியில் வசித்து வந்தார்.இந்த நிலையில் தாமரைகுளம் மேல்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்(24) என்பவருடன் அபர்ணாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நாகை காடம்பாடி சூர்யா நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கார்த்திக் அரவிந்த், அவசர போலீஸ் தொலைபேசி எண் 100 மூலம் நாகை வெளிப்பாளையம் போலீசாரை தொடர்பு கொண்டு தனது குழந்தையை, மனைவி அபர்ணா கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார், கள்ளக்காதல் ஜோடி குடும்பம் நடத்தி வந்த காடம்பாடி சூர்யா நகர் பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    கள்ளக்காதல் ஜோடி சுரேஷ்-அபர்ணா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அபர்ணாவின் மகன் கவிதிரன் அழுது கொண்டு அவர்களது சந்தோஷத்துக்கு இடையூறாக இருந்துள்ளான். இதனால் கள்ளக்காதல் ஜோடியால் உல்லாசமாக இருக்க முடியவில்லை. இதன் காரணமாக கள்ளக்காதல் ஜோடியினர் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

    அப்போது சுரேஷ், சிறுவன் கவிதிரனை தள்ளி விட்டுள்ளார். அபர்ணாவோ, தான் பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் தனது சுகபோகத்திற்காக சுடிதார் துப்பட்டாவால், சிறுவனின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அந்த சிறுவன் இறந்து விட்டான்.

    காம இச்சையால் இத்தகைய படுபாதக செயலை செய்த அபர்ணா, தான் செய்த இந்த கேவலமான செயலை எண்ணி கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த கொலையை மறைக்க முடிவு செய்த அபர்ணா தனது குழந்தை எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாக கூறி சிறுவனின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சென்னையில் வசித்து வந்த கார்த்திக் அரவிந்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக போலீசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணாவையும், அவருடைய கள்ளக்காதலன் சுரேசையும் நேற்று கைது செய்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் தான் பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை அருகே குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மகன்கள் வித்யாதரன் (9), சுவாதீஷ் (6). இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி பனங்குடி கிராமத்தில் உள்ள ஆணைக்குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கக்கோரி இறந்த சிறுவர்களின் பெற்றோர் அரசு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுவர்களின் பெற்றோருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ஒரு சிறுவனுக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்காக காசோலையை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். அப்போது முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
    நாகையில் முககவம் அணியாமல் சென்ற 30 பேருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    வெளிப்பாளையம்:

    கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் ஜூலை 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் சாலையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை சாலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மேற்பார்வையில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவம் அணியாமல் சென்ற 30 பேருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு யாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது 43). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ் (36) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரைராஜன் சம்பவத்தன்று குளத்திற்கு குளிக்க சென்றபோது அவரை வெங்கடேஷ் வழிமறித்துகம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    இது குறித்து துரைராஜன் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    கொடியாளத்தூர் ஊராட்சியில் 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாளத்தூரில் ஊராட்சியில் ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ரேவதி அய்யப்பன் தொடங்கி வைத்தார். முகாமில் 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஊராட்சி துணை தலைவர் தெய்வானை மோகன், ஊராட்சி எழுத்தர் சக்திவேல், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிழக்கு மீனா தெருவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த அஜய் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் காயம் அடைந்து அலறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த இனாமுள் உசேன் (17), சாலிஹாத் பேகம் (50), பாரிஸ் (14), டானிஷ் அகமது (7), அப்துல்லா (12), சித்திகா பேகம் (45), பவுசியா பேகம் (35), அஸ்ரா (9), மெகராஜ் பேகம் (53), நஸ்மா ஜாஸ்மின் (15) மற்றும் வேன் டிரைவர் அஜய் ஆகிய 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபர்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சீர்காழி அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா மடவாமேடு நடுத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (26) மீனவர். இவருக்கும் இவரது உறவினரான பழையார் பகுதியை சேர்ந்த துர்கா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த விக்னேஷ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக விக்னேஷ் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

    மத்திய மந்திரி எல்.முருகனை பற்றி முகநூலில் அவதூறு பரப்பியவரை கைது செய்யாததை கண்டித்து வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    மத்திய மந்திரி எல்.முருகனைப் பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட நபரை கைது செய்யாததை கண்டித்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் நாகை மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மந்திரி எல்.முருகனை பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட நபரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து போலீசார், பாரதீய ஜனதா நாகை மாவட்ட தலைவர் நேதாஜி உள்பட 34 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் இதுகுறித்து 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல திருமருகல் பஸ் நிலையத்தில் பாரதீய ஜனதாவினர் ஒன்றிய தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    நாகை புதிய பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து. தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.

    திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். முகாமில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் பகுதிகளை சேர்ந்த 200 பேருக்கு காய்ச்சல், சளி, நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருத்துவர் ஹரிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், ஊராட்சி செயலாளர் தமிழ்மணி மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திருப்பயத்தங்குடி, விற்குடி ஊராட்சிகளில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி முன்னிலை வகித்தார்.முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி, சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், ஊராட்சி எழுத்தர் சுல்தான் ஆரிபு, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×