என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுவதை பார்க்கலாம்.
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு (2020) விழா நடைபெறவில்லை..
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி வேளாங்கண்ணி பேராலய பெருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Next Story