என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விவசாயி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் தெற்குக் காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48) விவசாயி. இவருக்கு திருமணமாகி செந்தாமரை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரவி கருப்பம்புலம் கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது சிலர் இவரை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக ரவியின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் சிவராஜ் (39) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கீழையூரில் பிளஸ் 1 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அவுரிக்காட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கீழையூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த மாணவி மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் எங்களது மகளை கீழையூரை சேர்ந்த அருளானந்தம் என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிமிருந்து மகளை மீட்டு தாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாய்மேடு அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் கருங்கண்ணி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏற்கனவே சிதிலம் அடைந்து காணப்பட்ட இக்கோவில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் திருப்பணி செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருப்பணிகள் மேற்கொள்வதற்காக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலய பூஜைகள் நடந்தன. பின்னர் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் மகாமண்டபம், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக திருப்பணிகளை முடிப்பதற்கு தாமதமாவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘25 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராமாமிர்தம் திருப்பணிக்காக ரூ.5 லட்சத்தை கோவில் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்து இருந்தார். இதற்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்களை நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் ஒப்படைத்திருந்தார். அதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் இருக்கும். இந்த நிதியை விடுவித்து, கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.32 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசெல்வம் (வயது 33). இவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த ராஜசெல்வம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய மளிகை பொருட்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல அருகிலுள்ள வினோத் ஏஜென்சி என்ற இரும்பு கடையை உடைத்து ரூ.25,000 பணத்தை திருடிய மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 8 சி.சி.டி.வி கேமராக்களில் சிலவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர். மொத்தம் 2 கடைகளிலும் சேர்த்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த 2 கடைகளையும் பார்வையிட்டு விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் வடமாநில வாலிபர்கள் சிலர் கடைக்குள் வந்து சென்றதாக பதிவாகி இருந்தது. இதனால் வடமாநில வாலிபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது பாலத்தின் அடியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுபள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 23), சிவசந்தன் (25) என்பதும், சிறு சிறு பொட்டலங்களாக பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார், சிவசந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவா, கார்த்திக் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை தம்பிதுரை பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கு நின்ற புறாக்களை வேட்டையாடினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் புறாவை வேட்டையாடிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் காரைக்கால் அருகே கோயில்பத்து பகுதியை சேர்ந்த சிவா (வயது20), கார்த்திக் (23) என்பதும், இவர்கள் புறா, அணில் உள்ளிட்டவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவா, கார்த்திக் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வேதாரண்யத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 13-ந்தேதி இரவு இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் அரிவாள் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றதாக புஷ்பவனம் அருகே உள்ள பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்தனர்.
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். இதில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..மேலும் 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் பிரித்திவிராஜ், இந்திரா, ஊராட்சி செயலாளர் அனிதாராணி, சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உற்பத்தியாளர்கள் சேமித்து வைத்துள்ள உப்பு குவியல்களை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் மற்றும் பனைஓலைகளை கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் தண்ணீர் வடிய ஒரு வார காலம் ஆகும் எனவும் அதன் பிறகு உற்பத்தி மீண்டும் தொடங்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் ஆதினங்குடி, பண்டாரவடை, மெயின்ரோடு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருமருகல்-நன்னிலம் சாலையில் ஆதினங்குடி பஸ் நிறுத்தம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை, ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர்.
இதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருமருகல்-நன்னிலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழையூர் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
சீனாவில் இருந்து வந்த கொரோனா உலக முழுவதும் பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் 1½ ஆண்டுகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் அருகே திருமணங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் செயலாளர் திருஞானசம்பந்தம் ஆலோசனைப்படியும், வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் அறிவுரையின்படியும், திருமணங்குடி பகுதியில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் செல்போன் வசதி இல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் வீதம் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்துவதை மாணவர்களின் பெற்றோர் பாராட்டினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி, மாவட்ட செயலாளர் ராஜு, மாவட்ட பொருளாளர் துர்காம்பிகா ஆகியோர் தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அருண் தம்புராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சத்துணவு ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் ஓய்வு பணிக்கொடையாக வழங்க வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது போல, குறைந்த ஊதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 60 வயதில் இருந்து 62 வயதாகும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 58 வயதில் இருந்து 60 வயதாகும் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.