என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 48). இவர் நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு பணி முடித்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது குரவப்புலத்தில் ஒரு பள்ளி அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மூவேந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூவேந்தன் இறந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7-ந் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான பெருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடு்த்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் இன்றி நாளை கொடியேற்றம் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை இணையதளம், தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவுபடியும், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படியும், வேளாங்கண்ணி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படியும் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, உத்திரியமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவர்த்தி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.
மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் பிரபாகர் நேற்று பேராலய விழாவிற்கான பத்திரிகையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
தற்போது கொரோனா பரவலை தடுக்க பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு மற்றும் திருச்சபை வழங்கும் ஒழுங்கு நடைமுறைகளை பேராலய நிர்வாகம் கடைபிடித்து 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றும் நிகழ்ச்சிபக்தர்கள் இன்றி நடைபெறும். திருப்பலிகள் பேராலயத்துக்குள் நடைபெறும்.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கொடியேற்றம், நவநாள் மற்றும் திருப்பலிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். விழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுத்தளங்களிலும் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் பாதையாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து செல்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதையாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் பகுதி வழியாக இன்று காலை லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலையின் ஓரம் இருந்த மின்பம்பத்தில் லாரி உரசியதில் மேலேசென்ற மின்சார வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சாலையின் வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் (வயது65) என்பவர் மீது அறுந்து கிடடந்த மின் ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைப்பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த குளங்கரை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் அரவிந்தன் (25) என்பவர் முதியவர் மயங்கி கீழே விழுவதாக நினைத்து உடனடியாக ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில் அரவிந்தனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் 50 சதவீத ரசிகர்களுடன் நேற்று முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சினிமா தியேட்டர் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பது அதன் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 5 சினிமா தியேட்டர்களை திறக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் புதுப்படங்கள் வராததால் நாகை மாவட்டத்தில் உள்ள 5 சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை.
வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அல்லது அடுத்த மாதம் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதுபடங்களின் வரவை பொறுத்தே தியேட்டர்கள் திறக்கப்படும் என நாகை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.






