என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    வாய்மேடு:

    வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார். முகாமில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகட்டூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு தலைமை தாங்கினார். முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யம் அருகே புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் கரியாப்பட்டினம் மெயின் ரோட்டில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை நிறுத்தி பார்த்ததில் அவர் வேதாரண்யம் பகுதி அகஸ்தியம்பள்ளி சேர்ந்த சந்திரகுமார் (வயது 40) என்பதும் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 570 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் புகையிலை 300 பொட்டலங்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மயிலாடுதுறை அருகே நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தரங்கம்பாடி:

    அரக்கோணம் குறுக்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் மும்மூர்த்தி (வயசு 31). இவருக்கு திருமணமாகி மகள்-மகன் உள்ளனர். லாரி ஓட்டுனர். நேற்று மாலை அரக்கோணத்தில் இருந்து லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு அருகே லாரியை நிறுத்தி இருந்தார்.அப்போது காரைக்காலை சேர்ந்த சங்கர் மகன் பழனி (25) ஓட்டி வந்த லாரி நின்று கொண்டிருந்த லாரி மீதுமோதியதில் மும்மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    செம்பனார்கோவில் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைககு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

    வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    வேளாங்கண்ணி

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்தப் பேராலயம் திகழ்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கிய மாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி வந்து தேர்கொட்டகையை அடைந்தது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர் பவனியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

    இன்று(புதன்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் தஞ்சை மறைமாவட்ட பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடக்கிறது. தொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.

    கீழை நாடுகளின்" லூர்து நகர்" என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.

    வங்க கடலோரத்தில் இந்த பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 29-ந் தேதி பக்தர்கள் இன்றி நடந்தது.

    ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. முன்னதாக காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை கன்னடத்தில் திருப்பலி நடைபெறுகிறது.

    அதனைதொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீருடன் பெரிய தேர் பவனியானது ஆலய வளாகத்திள்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடக்கிறது.

    நாளை(8-ந்தேதி) அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    வாய்மேடு அருகே ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடப்பட்டது.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி முழுவதும் தடுப்பூசி போடாத அனைவருக்கும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, மருத்துவர் சிவரஞ்சனி, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் தாமரைப்புலம், கள்ளிமேடு பகுதிகளில் ரோந்து சென்ற அப்போது தாமரைப்புலத்தில் செல்லபாண்டியன் (வயது 58) என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். அதேபோல் கள்ளிமேடு கிராமத்தில் ஆங்காங்கே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த சம்பத்குமார் (49), செந்தில்குமார் (48), முருகானந்தம் (46) உட்பட 4 பேரை பிடித்து அவர்களிடம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து ரூ.290-யை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    வேதாரண்யத்தில் குடும்ப பிரச்சனையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 72). அவரது மகன் மகேந்திரன் (37). விவசாய கூலி தொழிலாளிகள். இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் எனக்கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக வீரப்பனுக்கும், மகன் மகேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் வீரப்பனை மரச் சட்டத்தால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த வீரப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் வீரசெல்வம் (வயது19). இவர் அதே ஊரில் உள்ள ஒலி-ஒளி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கருப்பம்புலம் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் வீரசெல்வம் ஈடுபட்டு கொண்டிருந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வீரசெல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தலைஞாயிறு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல்அலுவலர் குகன் தொடங்கி வைத்தார்.
    வாய்மேடு:

    தலைஞாயிறு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல்அலுவலர் குகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தி.மு.க. பேரூர் பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் தலைஞாயிறு பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வர்த்தக சங்க தலைவர் பால் முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், தி.மு.க. நிர்வாகிகள் வீரக்குமார், வீரசேகரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் குமார் நன்றி தெரிவித்தார்.
    வேதாரண்யம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில்களை கடத்தியவரை கைது செய்தனர். மேலும் 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை ராமர் பாதம் அருகே நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த மது பாட்டில்களை கோடியக்காட்டுக்குச் சென்று அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்ற கோடியக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் கடத்தி வந்த மது பாட்டில்களையும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் பிரபல ஆட்டோ திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ரெயிலடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). இவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ உள்ளது. இவர் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அதன் காரணமாக தனது ஆட்டோவை வேதாரண்யம் சன்னதி தெருவில் உள்ள மயில்வாகனம் (37) என்பவருக்கு தினசரி ரூ. 180 வாடகைக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

    இந்த நிலையில் மயில்வாகணன் ஆட்டோவை கீழ வீதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது ஆட்டோவை காணவில்லை.

    இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துவிட்டு சென்னையிலுள்ள ஆட்டோ உரிமையாளர் கார்த்திக் என்பவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கார்த்திக் சென்னையில் இருந்தபடி தன் பேஸ்புக்கில் அனைத்து நண்பர்களுக்கும் ஆட்டோ சங்கத்திற்கும் தகவல் அனுப்பி உள்ளார். இதைப்பார்த்த திருச்சி துவாக்குடி ஆட்டோ நண்பர்கள் துவாக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கார்த்திக் கொடுத்த தகவலின்படி உள்ள ஆட்டோ நிற்பதாக தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

    இது குறித்து கார்த்திக் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தெரிவித்துவிட்டு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் துவாக்குடி விரைந்துள்ளார். துவாக்குடி போலீசாரும் ஆட்டோ நண்பர்களும் பிடித்து வைத்து இருந்த ஆட்டோவை சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கைப்பற்றி வேதாரண்யம் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து திருக்குவளை பகுதி பாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிவேல் (வயது 27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேற்கண்ட மணிவேல் பல்வேறு வாகனத் திருட்டில் சம்பந்தப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×