என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகன் உதயவன் (வயது 26).
அவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இதனால் எலி பேஸ்ட் சாப்பிடுள்ளார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உதயவன் இறந்துவிட்டார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் காலனியை சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் ராமச்சந்திரன் (வயது 40), நல்லதம்பி (35), மரியதாஸ் (25), அருள்ராஜ் (24) ஆகிய 4 மீனவர்களும் மணியன்தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் 5 படகில் இலங்கை நாட்டை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை சூழ்ந்து கொண்டனர். பின்னர் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 மீனவர்களையும் மிரட்டி படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி வாக்கிடாக்கி, 3 செல்போன், டார்ச்லைட், 4 சிக்னல்லைட், 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடிச்சவலை, சீலா மீன் பிடிக்கும் வலை ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இன்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இது குறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதியில் மீனவர்களை தாக்கி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தற்போதும் அதேப்போல் சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் இதுபோல் பொருட்களை பறித்து செல்வதால் தமிழக மீனவர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.
உடனடியாக இலங்கை கடற்கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் பாலமுருகன் (வயது 27) திருமணமாகாதவர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்தாராம்.
இந்நிலையில் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பயிர்களுக்கு அளிக்கப்படும் விஷ மருந்தை எடுத்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து பின்பு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.
மேலும் கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில் ஆண்டு பெருவிழா முடிவடைந்ததையொட்டி 17 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலம் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டதால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு தெற்கு பகுதியை சேர்ந்தவர் வேதையன் (வயது 50). இவர் தோப்புத்துறை மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நில பிரச்சனை மற்றும் தம்பி மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் மானங்கொண்டான் ஆற்றுகரைப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த வேதையனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கடினல்வயல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). விவசாய தொழிலாளி. இவர் கடந்த 5ந்தேதி குடும்ப பிரச்சனையால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் நின்றிருந்தபோது மனோகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இருவரும் மனோகரனை கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட மனோகரன் கருப்பம்புலம் மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் நேற்று இறந்தார். இதுகுறித்து மனோகரின் சகோதரர் பாலகிருஷ்ணன் (70) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரக காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் மேல் விசாரணை செய்து வருகிறார்.






