என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26), மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (20). இருவரும் நண்பர்கள். மருதூர் வடக்கு கிராமத்தில் ஆனந்த் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். துரைமுருகன் அவருடன் பணியாற்றி வருகிறார். ஆனந்துக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.
இந்தநிலையில் கத்திரிப்புலத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண் 11வது படித்துவிட்டு கொரானாவால் பள்ளிக்கு செல்ல முடியாததால் அந்த பகுதியில் நடைபெறும் சாலை பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19ம்தேதி இளம்பெண்ணை ஆனந்தும், துரைமுருகனும் சேர்ந்து கடத்தி சென்று ஆனந்த் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தையும், துரை முருகனையும் போஸ்கோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
வேதாரண்யம் தாலுக்கா கத்தரிப்புலம் கோவில் குத்தகையை சேர்ந்தவர் கணேசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கத்திரிபுலத்தில் 16 வயதுடைய மாணவன் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இருவரும் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு உறவினர் வீட்டிற்கு பஸ்ஸில் சென்றபோது விஷம் குடித்துள்ளனர். சென்னை உறவினர் வீட்டுக்குச் சென்றபோது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனில்லாமல் மாணவி இறந்தார். காதலன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தனிப்படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அதிகாலை நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு பைபர் படகில் இருந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பைபர் படகில் சோதனை செய்தனர். அப்போது அந்த பைபர் படகில் மீன்பிடி வலைகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது..
கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுபோல பைபர் படகில் கஞ்சாவை பதுக்கி வைத்து அதனை இலங்கைக்கு கடத்த தயாராக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 10 மூட்டைகளில் இருந்த 280 கிலோ கஞ்சா, மீன்பிடி வலைகள், கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 4 மோட்டார் சைக்கிள்கள், பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை நாகை சுங்கத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எங்கிருந்து கஞ்சா கடத்தி நாகைக்கு கொண்டு வரப்படுகிறது?, இதில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை தொடர்பான குற்ற வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மருந்து கொத்தலரோடு அரசன் காலனி பகுதியை சேர்ந்த விஜயபாரதி (வயது23) என்பவர் மீது பல்வேறு கொலை, வழக்குகள் உள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பரிந்துரையின்படி, கலெக்டர் அருண் தம்புராஜ் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமம் எனை ஆளும் கண்ண பெருமான் கோவில் அருகே தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க குழிதோண்டி டவர் அமைக்க வேண்டிய பொருட்களை கொண்டு வந்து பணி தொடங்கினர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேட்டைகாரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முடிவு தெரியும்வரை டவர் அமைக்க மாட்டார்கள் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் அவரிக்காடு மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரிக்காடு மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ராஜா (வயது 46) என்பவர் தன் கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் டீக்கடையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்தனர்.






