என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தக்கோரி போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தக்கோரி பொறையாறில் சிலிண்டர், மொபட்டுக்கு மாலை அணிவித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.
பொறையாறு:
பொறையாறு பழைய பஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தக்கோரி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சம்மேளன செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கியாஸ் சிலிண்டர் மற்றும் மொபட்டுக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தினை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மாலா, மெஸ்சி, அன்பு செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






