என் மலர்

  செய்திகள்

  விஷம்
  X
  விஷம்

  காதல் பிரச்சனையில் வி‌ஷம் குடித்த பள்ளி மாணவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே காதல் பிரச்சனையில் விஷம் குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  வேதாரண்யம்:

  வேதாரண்யம் தாலுக்கா கத்தரிப்புலம் கோவில் குத்தகையை சேர்ந்தவர் கணேசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கத்திரிபுலத்தில் 16 வயதுடைய மாணவன் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

  இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இருவரும் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு உறவினர் வீட்டிற்கு பஸ்ஸில் சென்றபோது வி‌ஷம் குடித்துள்ளனர். சென்னை உறவினர் வீட்டுக்குச் சென்றபோது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

  இதில் சிகிச்சை பலனில்லாமல் மாணவி இறந்தார். காதலன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×