என் மலர்
நாகப்பட்டினம்
நாகை அருகே 100 நாள் வேலை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஐவநல்லூர் ஊராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே ஐவநல்லூர் ஊராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சரபோஜி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நீதிசோழன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இடும்பையன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் செல்லப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கணபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகை:
நாகை, அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்...ஆந்திராவில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி
வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்ட பணியின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் வேட்டைக் காரனிருப்பு மாரியம்மன் கோவில் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
இதில் 2 பெண்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதால் நாச்சியன்காடு சத்யா (வயது 35) என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கலாராணி (42), அலமேலுமங்கை (41) ஆகிய இருவரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சத்யா நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி வழக்கு பதிவு செய்து கலாராணியையும், அலமேலுமங்கையையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்துள்ளனர்.
உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் 830 சிறு உற்பத்தியாளர்கள் மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யபடுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு உப்பள பகுதிகளில் 57.2 மி.மீட்டர் பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பு குவியல்களை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் மற்றும் பனைஓலைகளை கொண்டு பாதுகாப்பாக மூடிவைத்துள்ளனர். உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வழக்கமாக அக்டோபர் மாதம் நிறைவடையும் உப்பு உற்பத்தி முன்கூட்டியே இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.
இதனால் 10 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் உப்பளங்களில் உள்ள மோட்டார்கள் மற்றும் உற்பத்திக்கான தளவாட பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முன்கூட்டியே முடிவுக்கு வந்ததால் மழைகாலத்தில் நல்ல விலை கிடைக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5 மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சங்க மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரவேல் முன்னிலை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் கு. பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தின் அதிக வருமானம் தரும் துறையாக டாஸ்மாக் உள்ளது. இதன் மூலம் ஆண்டு தோறும் ரூ.40 ஆயிரம் கோடி வரை அரசு கஜானாவுக்கு கிடைக்கிறது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் தொகையை கடையிலேயே வைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பணத்தை கடைகளில் வைக்காமல் எடுத்து செல்ல வேண்டும் என போலீஸ் துறை உத்தரவிடுகிறது. இந்த 2 துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருந்தும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
கடைகளில் வசூலாகும் தொகையை டாஸ்மாக் பணியாளர்ககள் எடுத்து செல்லும் போது தாக்குதல், கொலை செய்து பணத்தை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு தாக்கப்படும் பணியாளர்களுக்கு அரசு எவ்வித நஷ்ட ஈடு கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. பணத்தை கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
தாக்குதலில் படுகாயமடையும் பணியாளர்களின் முழு சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். சென்னையை போல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரிகள் நேரடியாக வந்து விற்பனை தொகையை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று (திங்கட்கிழமை) சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை ஆகிய டாஸ்மாக் மண்டலங்களின் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகை அருகே வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்த நபர் வாக்குப்பெட்டியை தூக்கி செல்ல முயன்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் என 11 காலி இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் அந்தனப்பேட்டை 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அப்போது திடீரென வாக்குச்சாவடி மையத்துக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நுழைந்தார். அவரிடம் ஓட்டு போடுவதற்கான ஆவணங்கள் இல்லை. அவரிடம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் கேட்ட போது அவர்,
நேர்மையாக வாக்குப்பதிவு நடக்கிறதா? என கண்காணிக்க வந்ததாக கூறி திடீரென வாக்கு பெட்டியை தூக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் போலீசார் அவரை மையத்தை விட்டு வெளியே செல்லும்படி கூறினார். அப்போது அவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்தனப்பேட்டை வாக்குப்பதிவு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டத்தில் நாளை முதல் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் இயங்க நடவடிக்ைக எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கஜா புயலின் போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த கால ஆட்சியின் போது சீரமைக்கப்படவில்லை. அவை அனைத்தும் தற்போதைய ஆட்சியில் சீரமைக்கப்படும் நாகை மாவட்டத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கடிடம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மாவட்டத்துக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கக்கூடிய அரிசி அரவை ஆலை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆலை நாகை மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது வரை 8 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாளை(திங்கட்கிழமை) முதல் விவசாயிகளின் இருப்பிடத்துக்கு சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 12 ஆண்டுகளாக நெல்லுக்கான ஆதரவு விலை உயர்த்தப்படவில்லை. தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்த உத்தரவிட்டுள்ளார். பொது ரக நெல்லுக்கு ரூ.75 உயர்த்தி வழங்கப்படும். நெல்லுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் நெற்பயிரை அதிக அளவு சாகுபடி செய்து வருகின்றனர்.
தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவைக்கு ஏற்ப உலர் எந்திரம் அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன், வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் பலர் இருந்தனர்.
வேளாங்கண்ணி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
கீழ்வேளூர் தாலுகா மேல ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி ராதிகா (வயது24). இவர் சில நாட்களுக்கு முன்பு கருங்கண்ணியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை ராதிகா சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவரில் வெடிப்பு இருந்துள்ளது. அந்த வெடிப்பில் அவர் கை வைத்த போது அதில் மறைந்திருந்த பாம்பு ஒன்று ராதிகாவை கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதிகாவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணமானது குறிப்பிடத்தக்கது.
கீழ்வேளூர் அருகே கார் கண்ணாடியை உடைத்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் ஹாஜா நஜ்முதின் மகன் முகமது தவ்பீக். இவர் தனது குடும்பத்தினருடன் நாகூர் தர்காவிற்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கார் கீழ்வேளூர் அரசாணிகுளம் அருகே வந்த போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கீழ்வேளூர் மெயின்ரோடு அரசாணி குளம் பகுதியை சேர்ந்த லத்திப் அலி மகன்கள் அப்துல் மாலிக் (வயது 21), ரஸ்சூல் ரகுமான் (24), அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் சத்தியசீலன் (22) ஆகிய 3 பேரும் காரை மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர்.மேலும் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் மாலிக், ரஸ்சூல் ரகுமான், சத்தியசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள்.
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கு மேற்பட்ட படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் தங்களது வலைகளில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.
கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் போடும் பணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கி செல்வது வழக்கம். தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் ரஷியாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சிறவி வகைகள் வந்து குவிந்துள்ளன.
மேலும் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, சிறவி உள்ளிட்ட 50 வகையான பறவைகள் வரத் தொடங்கி உள்ளன.
மும்பை பறவை ஆராய்ச்சி நிலைய பறவை விஞ்ஞானி பாலச்சந்திரன் மற்றும் குழுவினர் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடியக்கரை சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை பிடித்து அதன் கால்களில் தகுந்தார்போல் சிறிய வகை வளையம் போடப்படுகிறது. பறவையின் இனம், அலகின் நீளம், சிறகின் நீளம், எடை உள்ளிட்டவைகள் குறிக்கப்பட்டு, பின்னர் காலில் வளையம் போடப்பட்டு பறக்க விடப்படுகிறது.
இந்த பறவை மீண்டும் வெளிநாட்டில் பறவை ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால் காலில் உள்ள வளையத்தின் மூலம் எந்த நாடுகளில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் வந்துள்ளது என்பது குறித்து அறிவதற்காக தான் வளையங்கள் பொருத்தப்படுகிறது என விஞ்ஞானி கூறினார்.
வேதாரண்யம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சக்தி குருபாலன் (வயது 22). மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணமாகவில்லை.
தீராத வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தாராம். சம்பவத்தன்று விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.