என் மலர்
செய்திகள்

திருட்டு
திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்ணிடம் ரூ.8 ஆயிரம் திருட்டு
திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்ணிடம் ரூ.8 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் மாராச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது61). இவரது மனைவியின் தங்கை லதா(45) என்பவர் திருப்பூரிலிருந்து உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மாராச்சேரிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு லதா தான் கொண்டு வந்த பெட்டியை முருகேசன் வீட்டில் வைத்துவிட்டு அருகில் உள்ள அண்ணன் வீட்டில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பெட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேடி பார்த்த போது வீட்டின் பின்புறம் பெட்டி திறந்த நிலையில் கிடந்துள்ளது. அதில் இருந்த ரூ.8 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






