என் மலர்
மயிலாடுதுறை
குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பா.ஜனதா உறுப்பினர் தர்ணா; பேசவிடாமல் துணைத் தலைவர் தடுப்பதாக குற்றச்சாட்டு
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முருகப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி மாதிரிமங்கலம் ஊராட்சியில் குப்பை எடுக்கும் வாகனம் பழுது நீக்க வேண்டும், கீழவெளி மஞ்சளாற்றில் புதிய படித்துறை, பாலம் அமைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. உறுப்பினர் எஸ்.ஆர்.வினோத் செம்பியன்கோமலில் ரேசன் அங்காடி கட்ட வேண்டும் என்றும்.
அதிமுக உறுப்பினர் செழியன் பாலையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதியின்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தக் கூடாது என்றும் அ.தி.மு.க. உறுப்பினர் பாஸ்கரன், கீழபெரம்பூரில் விவசாய பாசன வசதிக்காக கிளியனூரிலிருந்து வரும் வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளதை வெட்டி சரி செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. உறுப்பினர் சிவகுமார் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும்.
கோனேரிராஜபுரம் வட்டார சுகாதார நிலையத்தில் 24 மணிநேரம் மருத்துவர்கள் பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினர்.
முன்னதாக பா.ஜ.கவை சேர்ந்த ஒன்றியக்குழு 18-வது வார்டு உறுப்பினர் எஸ்.ஆர்.வினோத் பேசும்போது குறுக்கீடு ஏற்பட்டது. இதனால், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, ஒன்றிய அலுவலக வாசலில், பா.ஜ.க நிர்வாகிகள் சித்ரா முத்துக்குமார், நாஞ்சில்பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கருப்புக்கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒன்றியக்குழுத் தலைவரை அவையை நடத்த விடாமல், துணை தலைவர் முருகப்பா அவையை நடத்துவதாகவும், ஒன்றிய ஆணையர், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளிக்காமல் சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு தகவலறிந்து முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் திமுகவினர் திரண்டதால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு குத்தாலம் தாசில்தார் கோமதி, இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில், அனைத்து உறுப்பினர்களுக்கும் அவையில் பேச வாய்ப்பு தரப்படும், பாஜக உறுப்பினரின் கோரிக்–கைகள் பரிசீலிக்–கப்படும் என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் மக்கள் தொண்டர் பயிற்சி முகாம் சீர்காழியில் 3 தினங்கள் நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மா பிரபாகரன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் ஆர்.சந்திரசேகர ஆசாத், மாநில பயிற்றுனர் பாபு, மாவட்ட பயிற்றுனர் மதனகோபால், முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாம் துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். வீரர்களுக்கு சான்றிதழ் எம்.செல்வராசு.எம்.பி. வழங்கி கவுரவித்தார்.
நிர்வாகக் குழு வழக்கறிஞர் சு.சுந்தரய்யா, மாவட்ட குழு உறுப்பினர் இளைஞர்களை ஊக்குவித்து பாராட்டி பேசினார்.சீர்காழி ஒன்றிய செயலாளர் நீதிசோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய்சக்திவேல், செம்பனார்கோவில் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் குத்தாலம் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காத 2 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த புளியந்துறை, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு கான்கிரீட் வீடுகள், வாய்க்கால்களில் கதவணை கட்டும் பணி உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது புளியந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் லலிதா அங்கு வைக்கப்பட்டுள்ள ஊராட்சி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து புளியந்துறை ஊராட்சி செயலாளராக இருந்து வரும் சண்முகம் (45) என்பவரை சம்பவ இடத்திலேயே பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
புளியந்துறை ஊராட்சி ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், பூரணச்சந்திரன், தாரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் லட்சுமிபாலமுருகன், சிவபாலன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
இதேபோல், மயிலா டுதுறை மாவட்டம்சீர்காழி அருகே காட்டூர் ஊராட்சி யில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் வேல்மு ருகன் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவண ங்களை முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் அவரையு ம்பணி யிடை நீக்கம் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார். கொள்ளிடம் ஒன்றியத்தில் 2 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது
சட்டநாதபுரத்தில் கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சட்டநாதபுரம் கிராமத்தில் கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன.
11ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கல இசை முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.
தொடர்ந்து யாகசா லையில் வைத்து பூஜிக்க ப்பட்ட புனிதநீரை வேத மந்திரங்கள் ஓத சர்வசாதகம் திருக்கோலக்கா கார்த்தியை சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சா ரியார்கள் விமான கலசங்களில் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தில் சுந்தரேசன், ஜெகதீசன் குடும்பத்தினர் மற்றும் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல், ஒன்றிய கவுன்சிலர் விசாகர், ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, பாமக மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் முருகவேல் கிராம நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
வைத்தீஸ்வரன்கோவிலில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புச்செ ழியன் முன்னிலைவகித்த னர். இளநிலை உதவியாளர் பாமா பல்வேறு தீர்மானங்க ளை படித்தார்.
இதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன், திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட புதிதாக இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உறுப்பினர்களின் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-
ராஜா கார்த்திகேயன் (அ.தி.மு.க) :- வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
முத்துக்குமார் (பா.ம.க) :- எனது பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்.
கவிதா (தி.மு.க) :-எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தரவேண்டும் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இதைப்போல் அ.தி.மு.கவை சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரியங்கா, மீனா ஆகியோர் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகளைமனுவாக தலைவரிடம் நேரில் கொடுத்தனர்.
துணைத் தலைவர்:- வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்ட புதிய இடம் தேர்வு செய்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
தலைவர்:- பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வாசிகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றார். வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சீர்காழி அருகே குரங்கு கடித்ததில் முதியவர் படுகாயமடைந்தார்.
சீர்காழி:
சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் மந்தக்கரை என்ற இடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக 2 ஆண் குரங்குகள் அங்குள்ள மரங்களில் தங்கி ஆடு, மாடு, நாய் மற்றும் மனிதர்களை அப்பகுதியில் செல்லும்போது போது விரட்டி பாய்ந்து சென்று கடிக்க வருகிறது. இதனால் அப்பகுதியே செல்லும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், கிராம பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவி த்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசே கரன் (வயது 65) என்பவர் வீட்டிலிருந்து சற்றுதூரம் உள்ள மந்தக்கரை பகுதி க்கு சாலையில் நடந்து கொண்டிருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக இரவு நேரத்தி லும் ஓடிவந்த ஒரு குரங்கு குணசேகரன் மீது பாய்ந்து இரண்டு கைகளையும் கடித்துக் குதறியதுஇதில் படுகா யமடைந்த குணசே கரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்ப்பாக்கம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் இரண்டு ஆண் குரங்குகளையும் உயிருடன் பத்திரமாக பிடித்து வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் கொண்டுவிட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குத்தாலம்:
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் பட்டணபிரவேச நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் பட்டண பிரவேச நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் வேத சிவாகம பாடசாலை நிர்வாக செயலர் குரு.சம்பத்குமார், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் மணி, கல்லூரி முதல்வர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வைகாசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான 18ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 20ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 22ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும் என்று ஆதீனப் பொதுமேலாளர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் பட்டணபிரவேச நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் பட்டண பிரவேச நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தருமபுரம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் வேத சிவாகம பாடசாலை நிர்வாக செயலர் குரு.சம்பத்குமார், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் மணி, கல்லூரி முதல்வர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வைகாசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான 18ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 20ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 22ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும் என்று ஆதீனப் பொதுமேலாளர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது
மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூதாட்டி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கலெக்டர் லலிதா பட்டா வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குத்தலாம் வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) என்பவர் அளித்த கோரிக்கை மனுவினை பரிசீலித்து உரிய விசாரணைக்குப் பின் அவருக்கு, மாவட்ட கலெக்டர் லலிதா பட்டா வழங்கினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
கடந்த 9-ந் தேதி நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோவிந்தம்மாள் க-பெ.உத்திராபதி(லேட்) என்பவர் நத்தம் புல எண். 379/14சி-ல் 0.01.00 ஹெக் காலிமனை வகைபாட்டில் உள்ள இடத்தின் ஒருபகுதியில் சிறிய அளவிலான கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
வீட்டின் சுவர்கள் முழுiயாக கட்டப்படாமலும், வீட்டின் மேற்கூரை கீற்றுகொண்டும், சுற்றுசுவர் தார்பாய் முலம் மூடப்பட்டுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவரது கணவர் உத்திராபதி 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துவிட்டார்.
இவரது இரண்டு மகள்கள் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் திருபுவனத்தில் வசித்து வருகின்றனர். ஒரே மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், அவரது மருமகள் குத்தாலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதுநாள் முதல் கோவிந்தம்மாள் தனியாக வசித்து வருகிறார்.
கிராமத்தினர் யாரும்கோ விந்தம்மாள் எவ்வீத இடையூறும் செய்வ தில்லை என்றும், ஆனால் அவர் அக்கம்பக்கத்தில் விசிப்பவர்கள், அவர் குடியிருந்து வரும் இடத்தை அபகரித்து விடுவார்கள் என பயத்தின் காரணமாகவும், வயது முதிர்வு மற்றும் மன இறுக்கத்தின் காரணமாகவும் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, தங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும், குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, கோவிந்தம்மாள் குடியிருந்து வரும் ஸ்தலத்தினை நில அளவை செய்ததில் புல எண். 379/14சி-ல் 0.01.00 ஹெக் நத்தம் காலிமனை என கிராம கணக்கில் உள்ளது.
எனவே நத்தம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் மாதாந்திர முதியோர் உதவி த்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த செயலால் கோவிந்தம்மாள் தமிழக முதலமைச்சர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்மு ருகதாஸ், குத்தாலம் தாசில்தார்கோமதி, மண்டல துணைதாசில்தார் சுந்தர், வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவல ர்ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே மயிலாடுதுறை தாலுக்கா நல்லத்துக்குடி கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இந்திரன் (வயது 20), கபிலன் (25). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செம்பனார்கோவிலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.
அப்போது செம்பனா ர்கோயில் போலீஸ் நிலையம் அருகே ஆறுபாதி மேட்டிருப்பு பகுதியில் சென்றபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் காளகஸ்திபுறம் மெயின் ரோட்டை சேர்ந்த மணியரசன்குமார் (20), ஆறுபாதி, புதுத்தெரு மேட்டுருப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் (20), ஆகிய இருவரும் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் 4 பேரும் பலத்த காயம் அடைந்ததனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இந்திரன் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரிமருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மணியரச ன்குமாருக்கு காலில் ஒருவிரல் துண்டாகிய நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.
சீர்காழியில் ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், வணிகர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.செயலாளர் முஸ்தபா, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், ரோட்டரி சங்க முன்னாள் செயலர் சண்முகம், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் இரா.சுதாகர், வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்க தலைவர் ஞானமணி, தொழிலதிபர் சுரேஷ்குமார், செல்போன் விற்பனை சங்கத்தை சேர்ந்த மார்க்ஸ்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா பரவல் தொடங்கிய 2020ம் ஆண்டுக்கு முன்பு வரை சீர்காழி ரயில் நிலையத்தில் இரு மார்கங்களிலும் பல்வேறு விரைவு ரயில்கள் நின்று சென்று வந்த நிலையில் அதன்பிறகு கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 13க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சீர்காழியில் நின்று செல்வதில்லை.இதனால் வணிகர்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு அலைகழிக்கப்படுகின்றனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் உரிய தீர்வு இல்லாததால் வரும் 14ம் தேதி சீர்காழி ரயில் நிலையம் முன்பு மிகப்பெரிய கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில் சீர்காழி பகுதியை சேர்ந்த அனைத்து அமைப்புகள், சங்கங்கள், பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதிலும் தீர்வு ஏற்பாவிட்டால் அடுத்தகட்டமாக சீர்காழியில் வணிகர்சங்கம் ஒத்துழைப்புடன் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது என முடிவு செய்யப்பட்டுது.இதனை அதன் தலைவர் கஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கூட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவன் உயிரிழந்தான்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தை இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அபிமணி (21). இவர் சீர்காழியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இதனிடையே அபிமணி அப்பகுதியில் உள்ள வயல் வழியாக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்ததில் அபிமணி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கிடந்துள்ளார்.
நீண்ட மணி நேரத்திற்கு பிறகே அவ்வழியாக சென்றவர்கள் மின்சாரம் தாக்கி கிடந்த அபிமணியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அழைத்து சென்றனர். அபிமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
மின் வாரிய அதிகாரிகள் விஸ்வநாதன், முத்துக்குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் மின்விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் தில்லைவிடங்கன் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க வேண்டும் என சின்னமேடு கிராமமக்கள் மனு கொடுத்தனர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் 168 மீனவ சமுதாய குடும்பத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் கொடு த்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு வழங்கிய சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறோம். சின்னமேடு பகுதியில் உள்ள இடங்கள், நிலங்களை எல்லாம் அரசுக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளோம்.
இதுவரைக்கும் நாங்கள் வசித்துவரும் சுனாமி குடியிருப்பு இடத்துக்கு பட்டா வழங்காமல் காலதாமதம் செய்கின்றனர். எங்களுடைய 168 குடும்பங்களின் விவரங்களை தரங்கம்பாடி தாசில்தார் மூலம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ளோம். எங்கள் மனு மீது கருணை கொண்டு பட்டா வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






