என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா உறுப்பினர் தர்ணா போராட்டம்.
ஒன்றியக்குழு கூட்டத்தில் பா.ஜனதா உறுப்பினர் தர்ணா
குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பா.ஜனதா உறுப்பினர் தர்ணா; பேசவிடாமல் துணைத் தலைவர் தடுப்பதாக குற்றச்சாட்டு
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முருகப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி மாதிரிமங்கலம் ஊராட்சியில் குப்பை எடுக்கும் வாகனம் பழுது நீக்க வேண்டும், கீழவெளி மஞ்சளாற்றில் புதிய படித்துறை, பாலம் அமைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. உறுப்பினர் எஸ்.ஆர்.வினோத் செம்பியன்கோமலில் ரேசன் அங்காடி கட்ட வேண்டும் என்றும்.
அதிமுக உறுப்பினர் செழியன் பாலையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதியின்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தக் கூடாது என்றும் அ.தி.மு.க. உறுப்பினர் பாஸ்கரன், கீழபெரம்பூரில் விவசாய பாசன வசதிக்காக கிளியனூரிலிருந்து வரும் வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளதை வெட்டி சரி செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. உறுப்பினர் சிவகுமார் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும்.
கோனேரிராஜபுரம் வட்டார சுகாதார நிலையத்தில் 24 மணிநேரம் மருத்துவர்கள் பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினர்.
முன்னதாக பா.ஜ.கவை சேர்ந்த ஒன்றியக்குழு 18-வது வார்டு உறுப்பினர் எஸ்.ஆர்.வினோத் பேசும்போது குறுக்கீடு ஏற்பட்டது. இதனால், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, ஒன்றிய அலுவலக வாசலில், பா.ஜ.க நிர்வாகிகள் சித்ரா முத்துக்குமார், நாஞ்சில்பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கருப்புக்கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒன்றியக்குழுத் தலைவரை அவையை நடத்த விடாமல், துணை தலைவர் முருகப்பா அவையை நடத்துவதாகவும், ஒன்றிய ஆணையர், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளிக்காமல் சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு தகவலறிந்து முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் திமுகவினர் திரண்டதால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு குத்தாலம் தாசில்தார் கோமதி, இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில், அனைத்து உறுப்பினர்களுக்கும் அவையில் பேச வாய்ப்பு தரப்படும், பாஜக உறுப்பினரின் கோரிக்–கைகள் பரிசீலிக்–கப்படும் என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






