என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி கோவிந்தம்மாளுக்கு மாவட்ட கலெக்டர் லலிதா பட்டா வழங்கினார்.
குறைதீர் கூட்டத்தில் மூதாட்டி மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்
மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூதாட்டி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கலெக்டர் லலிதா பட்டா வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குத்தலாம் வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) என்பவர் அளித்த கோரிக்கை மனுவினை பரிசீலித்து உரிய விசாரணைக்குப் பின் அவருக்கு, மாவட்ட கலெக்டர் லலிதா பட்டா வழங்கினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
கடந்த 9-ந் தேதி நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோவிந்தம்மாள் க-பெ.உத்திராபதி(லேட்) என்பவர் நத்தம் புல எண். 379/14சி-ல் 0.01.00 ஹெக் காலிமனை வகைபாட்டில் உள்ள இடத்தின் ஒருபகுதியில் சிறிய அளவிலான கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
வீட்டின் சுவர்கள் முழுiயாக கட்டப்படாமலும், வீட்டின் மேற்கூரை கீற்றுகொண்டும், சுற்றுசுவர் தார்பாய் முலம் மூடப்பட்டுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவரது கணவர் உத்திராபதி 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துவிட்டார்.
இவரது இரண்டு மகள்கள் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் திருபுவனத்தில் வசித்து வருகின்றனர். ஒரே மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், அவரது மருமகள் குத்தாலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதுநாள் முதல் கோவிந்தம்மாள் தனியாக வசித்து வருகிறார்.
கிராமத்தினர் யாரும்கோ விந்தம்மாள் எவ்வீத இடையூறும் செய்வ தில்லை என்றும், ஆனால் அவர் அக்கம்பக்கத்தில் விசிப்பவர்கள், அவர் குடியிருந்து வரும் இடத்தை அபகரித்து விடுவார்கள் என பயத்தின் காரணமாகவும், வயது முதிர்வு மற்றும் மன இறுக்கத்தின் காரணமாகவும் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, தங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும், குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, கோவிந்தம்மாள் குடியிருந்து வரும் ஸ்தலத்தினை நில அளவை செய்ததில் புல எண். 379/14சி-ல் 0.01.00 ஹெக் நத்தம் காலிமனை என கிராம கணக்கில் உள்ளது.
எனவே நத்தம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் மாதாந்திர முதியோர் உதவி த்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த செயலால் கோவிந்தம்மாள் தமிழக முதலமைச்சர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்மு ருகதாஸ், குத்தாலம் தாசில்தார்கோமதி, மண்டல துணைதாசில்தார் சுந்தர், வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவல ர்ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






