என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தரங்கம்பாடி:

    வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. 

    இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முகமது ரவூப் தலைமை தாங்கினர்.

    மயிலாடுதுறை கட்சியின் மாவட்ட தலைவர் ஆத்தூர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மஜ்கர்தீன், மயிலாடுதுறை தொகுதி தலைவர் அப்துல் காதர், பூம்புகார் தொகுதி தலைவர் அக்பர்அலி, தொகுதி செயலாளர் நூருல் அமீன், தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
     
    இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட–மைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த சுகந்தன், கலைமாறன், சந்தோஷ், பிரதிப்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 25 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்அப்போது கருணை கொலை செய்யு மாறு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
    பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர்.

    இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் இறந்ததால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால் பிரச்சினை நடந்து 15 நாட்களுக்கு பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். 

    ஆனால் தங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்கு போடப்பட்டதால், சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும், பூம்புகார் மீனவ பஞ்சாய த்தார் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, மீனவ கிராமத்தில் உள்ள நபர்கள் யாரும் தங்களிடம் பேசக்கூடாது, ரூ.40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இல்லை என்றால் தங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.

    இதுகுறித்துஉரிய விசாரணை செய்து நடவடி க்கை எடுக்கப்படாத நிலையில் தர்ணா போரா ட்டத்தில் ஈடுப ட்டோம் என்றனர். 

    இதையடுத்து கலெக்ட ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொ டர்ந்து, மனுவின் மீது உரிய நடவடிக்கைஎடுக்க ப்படும் எனக்கூறி அவர்களை போலீசார் அப்புற ப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சீர்காழி பகுதியில் உள்ள உர கடையில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி வட்டாரத்தில் உள்ள சில்லரை உர விற்பனை கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கடுப்பாடு) சிவவீரபாண்டியன், சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொ ண்டனர். 

    ஆய்வில் உரங்கள் இருப்பு, விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பு, உர இருப்பு பதிவேடு ஆகிய மூன்றும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். 

    நடப்பு குறுவைக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவறுத்தினார்கள். யூரியா அதிகமாக வாங்கிய 20 விவசாயிகள் விபரம் ஆய்வு செய்யப்பட்டது. 

    ஒரு விவசாயிக்கு அவருடைய நில உடைமைக்கு தேவையான உரங்கள் மட்டும் விற்க வேண்டும், யூரியா தனி ஒருவருக்கு அதிகம் விற்க கூடாது. அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்க கூடாது. உரங்களுடன் சேர்த்து இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்க கூடாது. விற்பனை உரிமம் அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    உரங்கள் விலைப்பட்டி யல் விபரம் கடையில் வைக்க வேண்டும். இதில் விதிமீறல்கள் காண ப்பட்டால் உரக்கடு ப்பாடு விதிகள் 1985-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.89.83 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியந்துரை, காட்டூர், மேகந்தி ரபள்ளி, ஆலாலசு ந்தரம், பனங்குடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். 

    மேலும் புளியந்துரை கிராம ஊராட்சி பெரிய தெரு பகுதியில் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணி, ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நூலக புதுப்பிக்கும் பணி, ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் 15- வது நிதிக்குழு திட்டத்தில் நடைபெற்ற சமத்துவ இடுகாடு பணி,  ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கழிவுநீர் போக்கு குழி பணி, ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாரத பிரமதரின் வீடு கட்டும் திட்ட பணி, காட்டூர் கிராம ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று முடிந்த தடுப்பணை பணி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் நீர் உறுஞ்சும் குழி வெட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரண சந்திரன் மற்றும் பொறியாளர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    செம்பனார்கோயிலில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே மயிலாடுதுறை தாலுக்கா நல்லத்துக்குடி கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இந்திரன் (வயது 20), கபிலன் (25) ஒரே வாகனத்தில் சென்றனர். 

    அப்போது எதிரே மற்றொரு வாகனத்தில் காளகஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த மணியரசன்குமார் (20), ஆறுபாதி புதுத்தெருவை சேர்ந்த முருகேசன் (20) வந்து கொண்டிருந்தனர்.
     
    எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்‌கு நேர் மோதி கொண்டது. இதில் 4 பேரும் பலத்த காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

    இதில் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செம்பனா–ர்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    சீர்காழியில் குழந்தைகளுக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழியில் செம்பனார் ்கோயில் அழகுஜோதி அகாடமி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. 

    கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து நற்சிந்தனைகளை பெறும் வகையிலும், உலகம் வெப்பமயமாதல் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. எல்.கே.ஜி முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ -மாணவிகளுக்கு வயது வாரியாக பிரித்து மழைநீர் சேகரிப்பும், நிலத்தடி நீர் பெருக்கம் குறித்த ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதேபோல் இந்திய பண்டிகைகள் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அழகு ஜோதி அகாடமி தொடர்பாளர் சிவா தலைமை வகித்தார்.

    சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, விவேகானந்தா நற்பணி இயக்க தலைவர் துரைராஜ், உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.மேலும் இதில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்து. 

    அப்போது அகாடமி தொடர்பாளர் சிவா பேசுகையில், கோடை விடுமுறையில் மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவர்களை கோடைகா லத்தின் பயிற்சி வகுப்புகள் மற்றும் நடன வகுப்புகள் சதுரங்க பயிற்சி போன்ற பயனுள்ள பயிற்சி வகுப்பு களில் பெற்றோர்கள் பங்கேற்க வைத்து அவர்களின் சிந்தனையை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்றார்.

    சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    செயலாளர் முஸ்தபா, நகர வர்த்த சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், ஜெயின் சங்கம் கியான்சந்த், ரோட்டரி சங்கம் ராஜேந்திரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ஆறுமுகம், பாலாஜி, விழுதுகள் இயக்கம் தலைவர் ஷரவணன், இந்து மக்கள் கட்சி சுவாமிநாஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, நித்தியாதேவி, நாகரத்தினம், ராஜேஷ், திருக்குறள் பண்பாட்டு பேரவையை சேர்ந்த இளங்கோவன், வழக்குரைஞர் சுந்தரய்யா, ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜெகஜெக.சண்முகம், மாற்றுதிறனாளிகள் சங்கம் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது சீர்காழியில் விரைவு ரெயில்கள் நின்று செல்லவில்லை என்றால் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என கோஷங்கள் எழுப்பினர். 

    இதில் பல்வேறு அனைத்து கட்சியினர், அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவாவடுதுறை ஆதீனத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் பழமைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.  சுதந்திர இந்தியாவிற்கு செங்கோல் வழங்கி துறவியின் பெருமையை உலகறியச் செய்த சிறப்புக்குரியது.

     இந்த ஆதீனத்தில் 75-ம் சுதந்திர ஆண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 75 தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு, எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் 17-ம் ஆண்டு விழாவையொட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் சுவாமிகள், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணிசம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ்மகராஜ் ஆகியோர் சிறப்புரையா ற்றினர். விழாவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் சுதந்திர விழாவில் செங்கோல் வழங்கிய திருவாடுதுறை ஆதீனத்தின் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சமுதாய பணியாற்றக்கூடிய 10 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் அருட்கொடை மற்றும் சிறந்த சமூக சேவகர்கள் 75 பேருக்கு சமுதாய சிற்பி என்ற சிறப்பு விருதினை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கி உரையாற்றினார்.

    எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகர் வரவேற்றார். மகாலிங்கம் ஓதுவார் திருமுறை பாடி னார். மூத்த வக்கீல் சிவபுண்ணியம், ஆதீனம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூ ர்த்தி, ஆதீனப் புலவர் குஞ்சிதபாதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆதீன அலுவலகமேலா ளர் சுந்தரேசன், கண்கா ணிப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாலை விரிவாக்க பணி நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அல்லிவிளாகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52) கூலித்தொழிலாளி.

    இவர் அருகில் காத்திருப்பு கிராமத்தில் விழுப்புரம்- நாகப்பட்டினம் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் அமைத்துள்ள பிளான்ட் வளாகத்தில் இன்று காலை அங்கு கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிறுவன வளாகத்தில் சுமார் 100 பேர் தங்கியுள்ள இரும்பு கொட்டகைக்கு மின் இணைப்பு வயர் ஜாயின்ட் முறையாக கொடுக்கப்படாததால் அதன்மூலம் அங்கு அருகில் இருந்த எர்த் கம்பியில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அறியாத ரவி கம்பி அருகே பாட்டில்களை சேகரித்த போது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரவி பலியானார்.

    இது குறித்து அறிந்த ரவியின்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பாதுகாப்பற்ற முறையில் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பலியான ரவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சீர்காழி நாகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினர். இது பற்றிய தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செம்பனார்கோயிலில் உள்ள கண்டியன்குளத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது,
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள கண்டியன்குளத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 6ம் தேதி முதல் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து வீதிஉலா காட்சி நடந்தது.

    நேற்று முன்தினம் தீமிதி திருவிழாவையொட்டி வல்லம் கிராமத்தில் உள்ள பொன்முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் கரகத்தை வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க வீதிஉலாவாக எடுத்து சென்று கோயிலை அடைந்தனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்ட அம்மன் முன்னிலையில், பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கடிச்சம்பாடி, வல்லம், பழைய திருச்சம்பள்ளி, செம்பனார்கோயில் ஆகிய கிராமங்களை சேர்ந்த நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    தில்லைக்காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தரங்கம்பாடி:

    சிதம்பரம் நடராஜர், தில்லைக் காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யுடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிதம்பரம் நடராஜர், தில்லைக் காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யு 2 புரூட்டஸ் யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். 

    அதன் தொகுப்பாளர் மைனர் விஜய் என்பவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஒற்றைக் காலில் நின்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பி.ஜே.பி. ஒன்றிய செயலாளர் சுந்தரவடிவேலு, ஒன்றிய பொதுச் செயலாளர் தீபம் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    ×